-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

தமிழ்நாட்டின் பொருளாதாரம் - சமீபத்திய தகவல்கள் | Tamil Nadu Economy - Latest Updates


  •  ☛ 2019-20 ஆண்டில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.  2019-20 ஆண்டில் தேசிய அளவில் சராசரி பொருளாதார வளர்ச்சி  4.2% ஆக இருந்தது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.03% சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு(Gross State Domestic Product (GSDP) )  2011-2012 ஆண்டுகளை அடிப்படை ஆண்டாகக் கொண்டு நிலையான விலைகள் (constant prices) அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
  • ☛ ஒட்டுமொத்த மாநில உற்பத்தி    ( Net State Domestic Product) மதிப்பில் , கணக்கிடப்பட்டுள்ள,  2019-2020 ஆம் ஆண்டின் தனி நபர் வருமானம் ( per capita income )   ₹1,53,853 ஆக உள்ளது.  இது தனி நபர் வருமானத்தில்  இந்திய அளவில் 6 வது இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.  
    • தனி நபர் வருமானத்தைப் பொறுத்தவரையில் 2018-2019 ஆம்  நிதியாண்டில்  தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம்  ₹1,42,941 எனவும், இந்திய அளவில் 12 வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

tamilnadu economy latest news information updates
Image Courtesy : The Hindu, 7-8-2020


  • ☛ 2018-2019 ஆண்டில்,  மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP) ) தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது.  முதலிடத்தில் மகாராஷ்டிரா இருந்தது. 
  • ☛ 2019-2020 ஆம் நிதியாண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP) ) தமிழ்நாடு முதலிடத்தை எட்டியுள்ளது (இவ்வாண்டிற்கான, மகாராஷ்டிராவின் தரவுகள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை)
    • கூ.தக.: 2019-2020 ஆண்டு காலக்கட்டத்தில் தமிழகத்தின் இரண்டாம் நிலை தொழில்துறைகள் 10.02 % சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளன.  இதில், தயாரிப்பு மற்றும் கட்டடத் தொழில்கள் முறையே 10.27% மற்றும் 10.49% வளர்ச்சியைப் பெற்றிருந்தன.
    • ☛ முதல் நிலைத் தொழில்களைப் பொறுத்தவரையில், வேளாண் துறை 7.43% வளர்ச்சியையும்,  கால்நடை வளர்ப்பு 11.13 % வளர்ச்சியையும் எட்டியிருந்தன.
    • ☛ சேவைத் துறையைப் பொறுத்தவரையில்,  நிதி சேவைகள் துறை 11.71% வளர்ச்சியையும், ரியல் எஸ்டேட் 7.29 % வளர்ச்சியையும் எட்டியிருந்தன.
(நன்றி:  T.N. clocks higher growth rate for third consecutive year, The Hindu , 7-8-2020)

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.