-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 04 August 2020

Current Affairs Today (4-8-2020)  for TNPSC Exams 

தமிழ்நாடு

  • ☛ 28 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் பாரதிராஜாவும்  இசையமைப்பாளர் இளையராஜாவும் “ஆத்தா”  (Aatha) என்கிற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.  பாரதிராஜாவும் இளையராஜாவும் கடைசியாக 1992-ல் நாடோடி தென்றல் படத்தில் பணிபுரிந்தார்கள். அதன் பின் இதுவரையில் எந்த படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியா

  • ☛ சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16- வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஐதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்தின்  கம்பாரிடெக் (Comparitech) எனும் நிறுவனம்  தனது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐதராபாத் முழுவதும் 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்கு பொருத்தப்பட்டுள்ளன.
  • ☛ “இந்தோ -இஸ்லாமிக் கலாச்சார பவுண்டேசன்” ( Indo Islamic Cultural Foundation ) எனும் 15 உறுப்பினர்களைக் கொண்ட, புதிய அமைப்பு, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக உத்தரப்பிரதேச சன்னி வஃப் வாரியத்தின் (U.P. Sunni Waqf Board) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.   உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி , அயோத்தியில் சோகாவால் டெக்சிலிலுள்ள தன்னிபூர் கிராமத்தில் (Dhannipur)  மசூதி கட்டுவதற்கு உ.பி. மாநில அரசினால் வழங்கப்பட்ட  5 ஏப்பர் நிலத்தை  உத்தரப்பிரதேச சன்னி வஃப் வாரியம் 24-2-2020 அன்று ஏற்றுக் கொள்வதற்கு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ☛ “பாதுகாப்புத் துறை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி மேப்பாட்டு கொள்கை 2020” ( ‘Defence Production & Export Promotion Policy (DPEPP) 2020’) ன் வரைவை,   3-8-2020 அன்று மத்திய அரசு பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய நோக்கம் , 2025 ஆம் ஆண்டிற்குள்  பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புத் திறனை 25 பில்லியன் டாலர் (₹1,75,000 கோடி) அளவிற்கு அதிகரிக்கச் செய்வதாகும்.
  • ☛ உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தின் (Chenab Bridge ) கட்டுமானப் பணியை 2021 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க இந்திய இரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. காஷ்மீரின் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டப்படுகிறது. 1.3 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டராகும். இதுதான் உலகத்தின் மிக உயரமான ரயில்வே பாலம் ஆகும்.
  • ☛ " இ-ரக்ஷாபந்தன் திட்டம்" எனும் பெயரில், இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலான திட்டத்தை ஆந்திர  மாநிலத்தில் அம்மாநில  முதல்வர் ஜெகன்மோகன் 3-8-2020 அன்று  துவக்கி வைத்தார்.இணையவெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் ஒரு மாத கால திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  •  பாகிஸ்தானின் ”டான் டி.வி. ” (Dawn tv) எனும் பிரபல செய்தித் தொலைக்காட்சி, 3-8-2020 அன்று  திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியது.
  • ☛ கயானா (Guyana) நாட்டின் அதிபராக முகமது இர்ஃபான் அலி (Mohamed Irfaan Ali) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : கயானா நாட்டின் தலைநகரம் - ஜார்ஜ்டவுண் (Georgetown) , நாணயம் - கயானா டாலர் (Guyanese Dollar(GYD) )

முக்கிய தினங்கள்

  • ☛ உலக சமஸ்கிருத தினம் / விஷ்வசம்ஸ்கிரிததினம் ( World Sanskrit Day / ‘Vishvasamskritadinam’ ) - ஆகஸ்டு 3
    • கூ.தக. : சமஸ்கிருத மொழியை வளர்க்க ஒவ்வோர் ஆண்டும் உலக சமஸ்கிருத நாள் கொண்டாடப்படுகிறது. இது ஷ்ரவணபூர்ணிமா எனப்படும் ஷ்ரவண மாத பெளர்ணமி தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ☛ சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 2 மாத காலமாக தங்கி ஆய்வு மேற்கொண்ட நாசா (NASA )விண்வெளி வீரர்கள் பாப் பென்கென் (Doug Hurley)  மற்றும் டக் ஹர்லி (Bob Behnken) ஆகிய இருவரும் தங்கள் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக 2-8-2020 அன்று பூமியை வந்தடைந்துள்ளனர்.  அந்த விண்கலமானது,  மெக்சிகோ வளைகுடாவில் உள்ள பென்சாகொலா கடலில் பாராசூட் மூலம் ‘டிராகன் 2’  வெற்றிகரமாக நீரில் இறங்கியது.
    • அமெரிக்காவில் 45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ‘ஸ்பிளாஷ் டவுன்’ என்று சொல்லப்படும் தண்ணீரில் விண்கலம் தரையிறங்குவதை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னராக இந்த மாதிரி தண்ணீரில் விண்வெளி வீரர்கள் தரையிறங்கிய நிகழ்வு  24-07-1975 அன்று,  பசுபிக் கடலில், அமெரிக்க - ரஷியா விண்வெளி வீரர்கள் அப்பொல்லோ -சோயஷ் (Apollo-Soyuz) திட்டத்தின்  போது நடைபெற்றது.
முக்கியத்துவம் :
  • அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ( SpaceX ) நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக ‘டிராகன் 2’ விண்கலத்தை உருவாக்கியது.
  • கடந்த 31  மே 2020 -ந் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய 2 அமெரிக்க விண்வெளி வீரர்கள் ‘டிராகன் 2’ விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றது.
கூ.தக. : அமெரிக்காவில்  மே 2002 ல்  தொடங்கப்பட்ட “ஸ்பேஸ் எக்ஸ்” எனும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் “எலன் மஸ்க்” (Elon Musk) என்பவராவர்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ☛  “Vishesh: Code to Win” என்ற  பெயரில் இந்திய கூடைப்பந்து அணி கேப்டன் விஷேஸ் பிகிகுவன்ஷியின் (  Vishesh Bhriguvanshi) வாழ்க்கை வரலாறு புத்தகத்தை  நிருபமா யாதவ் (Nirupama Yadav)  எழுதியுள்ளார்.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.