Current Affairs for TNPSC Exams 05 August 2020
இந்தியா
- ☛ சார்ஸ்-கோவி-2-வின் முதல் அனைத்திந்திய 1000 மரபணு வரிசைப்படுத்துதல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் 01-08-2020 அன்று அறிவித்துள்ளார். உயிரித் தொழில்நுட்பத் துறையால் குறுகிய காலத்தில் நிறுவப்பட்ட ஐந்து பிரத்யேக கோவிட்-19 உயிரிக் களஞ்சியங்களைக் கொண்ட மிகப்பெரிய வலைப்பின்னலையும் டாக்டர். ஹர்ஷ் வர்தன் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (Translational Health Science And Technology Institute (THSTI)), புவனேஸ்வரில் உள்ள வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (Institute of Life Sciences (ILS)), புதுதில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் (Institute of Liver and Biliary Sciences), புனேவில் உள்ள தேசிய செல் அறிவியல் மையம் (National Centre For Cell Science(NCCS)) மற்றும் பெங்களூருவில் உள்ள குருத்தணு அறிவியல் மற்றும் மீளுருவாக்க மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றில் இவை அமைந்துள்ளன.
- ☛ கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள ”ChAdOx1 nCoV-19” தடுப்பூசியை இந்தியாவில் நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
- ☛ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி 5-8-2020 அன்று நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு முதல் வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
- ☛ ”தேசிய நாடகப் பள்ளியின்” (National School of Drama) முன்னாள் இயக்குநர் ”இப்ராஹிம் ஆல்காஷி” (Ebrahim Alkazi) 4-8-2020 அன்று காலமானார். இவர் “இந்திய நாடகக் கலையின் தந்தை ('Father of Indian theatre' )” எனவும் அழைக்கப்படுகிறார்.
விருதுகள்
- ☛ ஐக்கிய நாடுகளவையின் ”கர்மவீர் சக்ரா விருது” (Karmaveer Chakra Award) இந்தியாவைச் சேர்ந்த சுனில் ydv SS என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரின் “SS Motivation” எனும் 'டெலிகிராம்’ சமூக வலைத்தளத்தின் மூலம் ஆற்றிய சமூக சேவைக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ”கர்மவீர் சக்ரா விருது” (Karmaveer Chakra Award) ஐக்கிய நாடுகளவை மற்றும் சர்வதேச அரசுசாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு (International Confederation of NGO (iCONGO) ) இணைந்து அப்துல்கலாம் அவர்களின் நினைவாக வழங்கி வருகிறது.
முக்கிய தினங்கள்
- ☛ லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட முதலாவது ஆண்டு தினம் 5 ஆகஸ்டு 2020 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- ☛ தேசிய எலும்பு, மூட்டு தினம் (National Bone and Joint Day) - ஆகஸ்ட் 4 | மையக்கருத்து - “ ‘Prevention of deformity in degenerative disease’
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.