Current Affairs for TNPSC Exams 06 August 2020
தமிழ்நாடு
- ☛ திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு இடைக்கால துணைவேந்தராக பேராசிரியர் கற்பக குமாரவேல் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
- ☛ ”பைடு சர்ச்” (Baidu Search) எனப்படும் சீனாவின் மிகவும் புகழ்பெற்ற இணைய தேடல் இயந்திரத்திற்கு (Baidu Search Engine) இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது சீனாவின் கூகுள் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- ☛ இமாச்சல பிரதேசத்தில் அமையவுள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்) சிர்மார் (Institute of Management (IIM) Sirmaur ) -க்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் அவர்கள் 4-8-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
- ☛ 'வித்யார்த்தி விஜியன் மந்தன் 2020-21’ (Vidyarthi Vigyan Manthan 2020-21) எனும் பெயரில் , 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே அறிவியலை பிரபலப்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
- ☛ இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம் (leopard conservation centre) உத்தரகாண்ட் மாநில அரசினால் அம்மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்திலுள்ள லங்கா (lanka) என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.
- ☛ ”Mobile Infection Testing and Reporting (MITR) lab” என்ற பெயரில் இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகத்தை (RT-PCR lab) கர்நாடக மாநில அரசு பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வகத்தை பெங்களூவின் இந்திய அறிவியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கோவிட் -19 நோய் பரிசோதனை மட்டுமல்லாது HCV, H1N1, TB, HIV, HPV போன்ற நோய்களை சோதிக்கவும் இந்த நடமாடும் சோதனை மையத்தைப் பயன்படுத்தலாம்.
- ☛ "ஜைகோவ்-டி தடுப்பூசி" (ZyCoV-D) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரான பிளாஸ்மித் டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசிக்கு 2-ம் கட்ட சோதனை 6-8-2020 அன்று தொடங்கியுள்ளது. இதனை ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா ஹெல்த்கேர் (Zydus Cadila Healthcare Ltd) நிறுவனம் தயாரித்துள்ளது.
கூ.தக.:
- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அவை ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி, ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும்.
- இவ்விரு தடுப்பூசிகளையும் மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அனுமதியை ஏற்கனவே அளித்துள்ளது.
- இதற்கு மத்தியில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனைகளை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் நடத்த உள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- ☛ கரோனா பாதிப்பால் உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், வளரும் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்திய-ஐ.நா. வளா்ச்சி கூட்டு நிதியத்துக்கு (India-UN Development Partnership Fund) இந்தியா ரூ.115.95 கோடி பங்களிப்பு செய்துள்ளது.ரூ.45 கோடி இதில் அங்கம் வகிக்கும் அனைத்து வளரும் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்காகவும், ரூ.70.95 கோடி காமன்வெல்த் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நிகழ்வுகள்
- ☛ கம்பியூட்டர் மவுஸை உருவாக்கியவர்களில் ஒருவரான வில்லியம் இங்கிலீஸ் (William English) என்பவர் காலமானார். டஃக் எங்கல்பர்ட் ( Doug Engelbart ) என்பவர் இட்ட வரைபடத்தின் படி 1963 ஆம் ஆண்டில் முதல் கம்பியூட்டர் மவுஸை வில்லியம் இங்கிலீஸ் (William English) உருவாக்கினார்.
- ☛ அமெரிக்காவின் நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் தவே ஏ. சோக்ஷி (39) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ☛ லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து 4-8-2020 அன்று வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- கூ.தக. : அம்மோனியம் நைட்ரேட் ஒரு வெள்ளை நிற, படிக வேதிப்பொருள் ஆகும், இது தண்ணீரில் கரையக்கூடியது. வணிக வெடிபொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
நியமனங்கள்
- ☛ ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா 6-8-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை 5-8-2020 அன்று ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தினங்கள்
- ☛ உலக நுரையீரல் புற்றுநோய் தினம் (World Lung Cancer Day) - ஆகஸ்ட் 1
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.