Current Affaris for TNPSC Exams 7-8-2020
தமிழ்நாடு
- தமிழ்நாட்டின் பொருளாதாரம் - சமீபத்திய தகவல்கள் | Tamil Nadu Economy - Latest Updates
(நன்றி: தி இந்து, 7-8-2020)
- ☛ 2019-20 ஆண்டில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. 2019-20 ஆண்டில் தேசிய அளவில் சராசரி பொருளாதார வளர்ச்சி 2% ஆக இருந்தது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.03% சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு(Gross State Domestic Product (GSDP) ) 2011-2012 ஆண்டுகளை அடிப்படை ஆண்டாகக் கொண்டு நிலையான விலைகள் (constant prices) அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
- ☛ ஒட்டுமொத்த மாநில உற்பத்தி ( Net State Domestic Product) மதிப்பில் , கணக்கிடப்பட்டுள்ள, 2019-2020 ஆம் ஆண்டின் தனி நபர் வருமானம் ( per capita income ) ₹1,53,853 ஆக உள்ளது. இது தனி நபர் வருமானத்தில் இந்திய அளவில் 6 வது இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
- தனி நபர் வருமானத்தைப் பொறுத்தவரையில் 2018-2019 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் ₹1,42,941 எனவும், இந்திய அளவில் 12 வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ☛ 2018-2019 ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP) ) தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது. முதலிடத்தில் மகாராஷ்டிரா இருந்தது.
- ☛ 2019-2020 ஆம் நிதியாண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP) ) தமிழ்நாடு முதலிடத்தை எட்டியுள்ளது (இவ்வாண்டிற்கான, மகாராஷ்டிராவின் தரவுகள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை)
- ☛2019-2020 ஆண்டு காலக்கட்டத்தில் தமிழகத்தின் இரண்டாம் நிலை தொழில்துறைகள் 10.02 % சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளன. இதில், தயாரிப்பு மற்றும் கட்டடத் தொழில்கள் முறையே 10.27% மற்றும் 10.49% வளர்ச்சியைப் பெற்றிருந்தன.
- ☛ முதல் நிலைத் தொழில்களைப் பொறுத்தவரையில், வேளாண் துறை 7.43% வளர்ச்சியையும், கால்நடை வளர்ப்பு 11.13 % வளர்ச்சியையும் எட்டியிருந்தன.
- ☛ சேவைத் துறையைப் பொறுத்தவரையில், நிதி சேவைகள் துறை 11.71% வளர்ச்சியையும், ரியல் எஸ்டேட் 7.29 % வளர்ச்சியையும் எட்டியிருந்தன.
இந்தியா
- இந்தியாவின் முதல் “ஆன்லைன் தேசபக்தி திரைப்படத் திருவிழா” (online patriotic film festival) தேசிய திரைப்பட மேப்பாட்டு நிறுவனத்தின் (National Film Development Corporation) மூலம் 7-21 ஆகஸ்டு 2020 தினங்களில் www.cinemasofindia.com எனும் இணையதளத்தின் மூலம் நடைபெறுகிறது.
வெளிநாட்டு உறவுகள்
- மாலத்தீவு நாட்டில் செயல்படுத்தப்படும் மீன் தொழிற்சாலை கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்தியா 18 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை ”Export-Import Bank (EXIM)” வங்கி வழியாக வழங்குகிறது.
பொருளாதாரம்
- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ ரேட், 4 சதவீதமாக தொடரும் . ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதம் 3 புள்ளி மூன்று ஐந்தாக தொடரும் என்றும் அதிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நியமனங்கள்
- இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (Comptroller Auditor General of India (CAG) ) ஜி.சி.முா்முவை (GC Murmu ) மத்திய அரசு 6-8-2020 அன்று நியமித்துள்ளது. இப்போது சிஏஜி-யாக உள்ள ராஜீவ் மகரிஷியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முர்மி இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் முா்மு குஜராத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவாா். பிரதமா் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு தலைமைச் செயலராக முா்மு பணியாற்றினாா். மத்திய நிதித்துறை செயலராகவும் அவா் இருந்துள்ளாா்.இவர், இதற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவி வகித்துவந்தார்.
- ’இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் “ ( Securities and Exchange Board of India(SEBI) ) தலைவராகப் பதவி வகித்துவரும் அஜய் தியாகியின் (Ajay Tyagi) பதவி காலம் 01-9-2020 முதல் 28-02-2022 வரையிலான 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
- ஹிரோஷிமா தினம் ( Hiroshima Day ) - ஆகஸ்டு 6 ( 6-8-1945 அன்று அமெரிக்கா, “லிட்டில் பாய்” (Little Boy) எனும் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா பட்டணத்தின் மீது வெடிக்க செய்தது. மேலும், இரண்டாவதாக, ‘ஃபேட் மேன்’ (Fat Man) எனும் அணு குண்டு 9-8-1945 அன்று நாகஷாகி நகரத்தின் மீது வெடிக்க வைக்கப்ப்பட்டது. )
- தேசிய கைத்தறி தினம் ( National Handloom Day ) - ஆகஸ்டு 7 (7 ஆகஸ்டு 1905 ல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. )
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- ‘RAW: A History of India’s Covert Operations’ என்ற நூலின் ஆசிரியர் - யதிஷ் யாதவ் (Yatish Yadav)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.