Current Affairs Today 19-8-2020
தமிழ்நாடு
☛ மருத்துவ படிப்புக்காக அகில இந்திய தொகுப்புக்கு தமிழகத்தால்
ஒப்படைக்கப்படும் இடங்களில் 50% தமிழக ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி
யது தொடர்பான இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள
3 பேர் கொண்ட இட ஒதுக்கீட்டுக் குழுவிற்கு தமிழக அரசு சார்பில் "தமிழ்நாடு
மருத்துவ பணிகள் கழகத்தின்" நிர்வாக இயக்குனர் உமாநாத்தை நியமித்து தமிழக
தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த குழு
அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
☛ ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமப்புற
வீட்டுக்கும் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை 2024-க்குள் 100 சதவீதம்
எட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது வரை, தமிழகத்தில் உள்ள 126.89 லட்சம் கிராமப்புற வீடுகளில், 25.98 லட்சம்
(20.45%) வீடுகளுக்குக் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான
குழாய் இணைப்புகளைப் பொருத்த வரையில், ஒட்டுமொத்த நாட்டில் 17-வது இடத்தில்
தமிழ்நாடு தற்போது இருக்கிறது. 2020-21-ஆம் ஆண்டில் 33.94 லட்சம்
வீடுகளுக்குக் குழாய் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு திட்டமிடுகிறது.
கூ.தக. :
o பிரதமர் மோடி அவர்களின் 2019 ஆம் ஆண்டின் சுதந்திர உரையின் போது
அறிவிக்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில்
உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பு வழியாக குடி தண்ணீரை
வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. .
o ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து போதுமான
அளவிலும் (ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 55 லிட்டர்கள்), பரிந்துரைக்கப்பட்ட
தரத்திலும் குடி தண்ணீரை உறுதியாக வழங்குவதற்கு ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு
நிர்ணயித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்குக் குழாய் இணைப்பை வழங்குவது
பெண்களின், குறிப்பாக சிறுமிகளின், வேலைப்பளுவை குறைக்க உதவும்.
☛ மத்திய அரசின் ஹிந்தி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஐசரி கே கணேஷ்
நியமனம் :
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சாா்பில்,
மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் தலைமையில் ஹிந்தி ஆலோசனைக் குழு
அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மத்திய
அமைச்சக செயலா்கள், இணைச் செயலா்கள் உள்ளிட்ட 30 உறுப்பினா்கள்
இடம்பெற்றுள்ளனா். இதில், தமிழகத்தில் இருந்து சென்னைப் பல்லாவரத்தில் உள்ள
வேல்ஸ் உயா்கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டா் ஐசரி கே கணேஷ்,
உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்தியா
☛ அமெரிக்காவை விட தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்து உயர் கல்வியில்
சேரும் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகமாக இருப்பது புள்ளி விவரங்களில்
தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பள்ளி படிப்பை நிறைவு செய்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின்
மொத்த விகிதம் 41 சதவீதமாக இருக்கிறது. அதோடு ஒப்பிட்டு பார்க்கையில்
தமிழகத்தில் மொத்த மாணவர்களின் விகிதம் 49 சதவீதம் ஆக உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளின் புள்ளி விவரங்களை பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும்
தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது
குறிப்பிடத்தக்கது.
☛ உயர்கல்வி நிறுவனங்களின் கண்டு பிடிப்பு மற்றும் சாதனைகளுக்கான அடல்
தரவரிசைப் பட்டியல் 2020 ல் (Atal Rankings of Institutions on Innovation
Achievements (ARIIA) 2020) ஐஐடி சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
ARIIA 2020 தரவர்சையில் முக்கிய இடங்களைப் பெற்றுள்ள கல்விநிறுவனங்களின்
விவரங்கள் வருமாறு,
o மத்திய நிதியளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்:
§ 1. ஐஐடி சென்னை, 2. ஐஐடி மும்பை, 3. ஐஐடி டெல்லி, 4. ஐஐஎஸ்சி பெங்களூரு,
5.ஐஐடி காரக்பூர்
o மாநில அரசின் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் :
§ 1. வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்,மகாராஷ்டிரா, 2. பஞ்சாப் பல்கலைக்கழகம்,
3. சௌத்ரி சரண்சிங் ஹரியாணா வேளாண் பல்கலைக்கழகம்
o மாநில நிதியுதவி பெறும் தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் :
§ 1. புணே பொறியியல் கல்லூரி, பூனே, 2. பிஇஎஸ் பொறியியல் கல்லூரி, கர்நாடகா,
3. கோயம்புத்தூா் தொழில்நுட்ப நிறுவனம் (சிஐடி)
o பெண்கள் (உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே):
§ 1. அவினாசிலிங்கம் அறிவியல் மற்றும் உயர் கல்விக்கான பெண்கள் நிறுவனம், 2.
இந்திரா காந்தி டெல்லி பெண்கள் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
o தனியார் கல்வி நிறுவனங்கள்:
§ 1. எஸ்ஆர் பொறியியல் கல்லூரி, தெலங்கானா, 2. ஜி.எச்.ரைசோனி பொறியியல்
கல்லூரி, நாக்பூர், 3. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்
கல்லூரி, 4.என்ஐடிடிஇ மீனாட்சி தொழில்நுட்ப நிறுவனம், 5. சிஎம்ஆர் பொறியியல்
மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
o தனியார் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்:
§ 1. கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம், ஒடிசா, 2. எஸ்ஆர்எம் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,சென்னை 3. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,
4. அமிர்தா விஸ்வ வித்யாபீடம், 5. சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
நிறுவனம்.
கூ.தக. :
மத்தியக் கல்வி அமைச்சகம் (Ministry of education ) மற்றும் ஏஐசிடிஇ (All
India Council for Technical Education (AICTE)) ஆகியவை இணைந்து அடல்
தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன. இது கண்டுபிடிப்புகளில் சாதனை நிகழ்த்தும்
கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை (ARIIA) ஆகும். இந்த ஆண்டுக்கான பட்டியல் 7
அம்சங்களை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டது. பட்ஜெட் மற்றும் நிதி
ஆதரவு, உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள், விழிப்புணர்வு, யோசனை உருவாக்கம்
மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஆதரவு, தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான
ஊக்குவிப்பு, புதுமையான கற்றல் முறைகள் மற்றும் படிப்புகள், அறிவுசார் சொத்து
உருவாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் வணிகமயமாக்கல் மற்றும்
நிறுவனத்தின் நிர்வாகத்தில் புதுமை ஆகியவை அளவுகோல்களாக நிர்ணயிக்கப்பட்டன.
☛ மத்திய பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் உள்ளூா்
இளைஞா்களுக்கே வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங்
சௌஹான் அறிவித்துள்ளாா்.
இதை உறுதிசெய்யும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என்றும் அவா்
கூறியுள்ளாா். ஏற்கனவே, கமல்நாத் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது,
அம்மாநிலத்தின் தொழிற்சாலைகளில் உள்ளூா்வாசிகளுக்கு 70 சதவீத வேலைவாய்ப்பு
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
☛ உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி (Manduadih ) இரயில் நிலையத்தை (Railway Station) ‘பனாரஸ்’ (‘Banaras’) என மறுபெயரிட உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 17, 2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது
☛ இயற்கை விவசாயிகளின் (organic farmers) எண்ணிக்கையில் இந்தியா
முதலிடத்திலும், கரிம வேளாண்மையின் கீழ் பரப்பளவில் (area under organic
farming) 9 வது இடத்திலும் உள்ளதாக
மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், குறிப்பிடத்தக்க வகையில்,
சிக்கிம் மாநிலம் முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு (completely organic )
மாறிய உலகின் முதல் முதல் மாநிலமாக
உருவெடுத்துள்ளது.
o கூ.தக. : இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, மத்திய அரசினால்
2015 ஆம் ஆண்டில், வேதியியல் இலவச விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக வடகிழக்கு
பிராந்தியத்திற்கான மிஷன் ஆர்கானிக் மதிப்பு சங்கிலி மேம்பாடு (Mission
Organic Value Chain Development for North East Region (MOVCD)) மற்றும்
பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா ( Paramparagat Krishi Vikas Yojana (PKVY) )
ஆகிய இரண்டு பிரத்யேக திட்டங்கள் தொடங்கப்பட்டன.
☛ ஃபோர்ப்ஸின் 2020 ஆம் ஆண்டிற்கான உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும்
நடிகர்களின் பட்டியலில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 48.5 மில்லியன்
அமெரிக்க டாலர் வருமானத்துடன் 6 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியர் இவர் மட்டுமே.
இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே, டுவைன் ஜான்சன், ரியான்
ரெனால்ட்ஸ் மற்றும் மார்க் வால்ல்பெர்க் ஆகியோர் உள்ளனர்.
சர்வதேச நிகழ்வுகள்
☛ அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தனது தோ்தல்
பிரசாரங்களுக்காக ஊடகச் செயலராக சப்ரினா சிங் எனும் இந்திய அமெரிக்கரை
நியமித்துள்ளார்.
அமெரிக்காவில் முக்கிய அரசியல் கட்சி சாா்பில் போட்டியிடும் துணை அதிபா்
வேட்பாளரின் ஊடகச் செயலராக இந்திய-அமெரிக்கா் ஒருவா் நியமிக்கப்படுவது இதுவே
முதல்முறையாகும்.
☛ “ஆபிரகாம் ஒப்பந்தம்” (“Abraham Accord”) என்ற பெயரில்
ஐக்கிய அரபு எமிரேட்-இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான வரலாற்று சிறப்பு வாய்ந்த
சமாதான உடன்படிக்கை ( Israel–United Arab Emirates peace agreement) 17-8-2020
அன்று செய்து கொள்ளப்பட்டது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
(Netanyahu) மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் துணை உச்ச தளபதி ஷேக் முகமது பின் சயீத் (Sheikh Mohammed Bin
Zayed)ஆகியோர் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதன் மூலம்,
பாலஸ்தீனிய நிலங்களை மேலும் இணைப்பதை இஸ்ரேல் நிறுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மத்தியஸ்தராகஅமெரிக்காவின்
ஜனாதிபதி டொனால்ட் ஜான் டிரம்ப் செயல்பட்டார்.
நியமனங்கள்
☛ மத்திய தேர்தல் ஆணையர் அசோக் லவசா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை
ஏற்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
o கூ.தக. : தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில்
அரோராவும் (Sunil Arora ), தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா (Sushil Chandra)
ஆகியோரும் உள்ளனர்.
☛ சத்ய பால் மாலிக் (இதற்கு முன் கோவா ஆளுநராக இருந்தவர்) மேகாலயா
மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி கோவா மாநிலத்தின் நிர்வாகப்
பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் & தொழில்நுட்பம்
☛ கணிணி தொழில்நுட்பத்தில் ”பிக்சல்” (Pixel) என்பதைக் கண்டுபிடித்த
அமெரிக்க விஞ்ஞானி ரஸ்ஸல் கிர்ஷ் (Russell Kirsch) 11-8-2020 அன்று
காலமானார்.
பிக்சல்கள், புகைப்படங்களைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல்
புள்ளிகளாகும். இதனை ரஸ்ஸல் கிர்ச் 1957 இல் கண்டுபிடித்தார். உலகின் முதல்
டிஜிட்டல் புகைப்படத்தை ஸ்கேன் செய்த பெருமை இவரையே சாரும். கிர்ஷ் தனது மகன்
வால்டனின் சிறிய, 2-பை-2-இன்ச் கருப்பு மற்றும் வெள்ளை டிஜிட்டல் படத்தை
உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்பு நாசாவின் ஆரம்ப விண்வெளி ஆய்வுகளுக்கு
அப்பல்லோ மூன் தரையிறக்கங்கள் உட்பட உதவியது மற்றும் எதிர்கால இமேஜிங்
தொழில்நுட்பங்களான செயற்கைக்கோள் படங்கள், சி.டி ஸ்கேன் மற்றும் பிறவற்றிற்கு
வழி வகுத்தது.
o கூ.தக. : ”பிக்சல்” (Pixel) என்பதன் விரிவாக்கம் - Picture
Element
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.