-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 2-3 August 2020

 Current Affairs for TNPSC Exams 2-3 August 2020

இந்தியா

  • 👉ஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன்   ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கர்னூலில் உயர் நீதிமன்றம் செயல்படும்.
  • 👉தேசிய கல்விக் கொள்கையில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான விருப்ப மொழிப்பாடத்திலிருந்து சீனமொழி நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையில் மேல்நிலை வகுப்பு மாணவா்கள் தங்கள் தாய்மொழி தவிர மற்ற வெளிநாட்டு மொழிகளை விருப்பப் பாடமாகத் தோ்வு செய்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் கலாசாரத்தையும் மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மேல்நிலை வகுப்பு மாணவா்கள் பிரெஞ்சு, ஜொ்மன், ஸ்பானிஷ், ஜப்பானிய மொழி, போா்ச்சுகல் மொழி, கொரிய மொழி, ரஷிய மொழி உள்ளிட்டவற்றை விருப்ப மொழிப்பாடமாகத் தோ்வு செய்ய முடியும். அந்தப் பட்டியலில் சீன மொழி இடம்பெறவில்லை.
  • 👉”கிராமோத்யோக் விகாஸ் யோஜனா” (“Gramodyog Vikas Yojana”) என்ற பெயரில் அகர்பத்தி (Agarbatti) தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு 200 தானியங்கி அகர்பத்தி தயாரிப்பு இயந்திரங்களையும் 40 கலப்பு இயந்திரங்களையும் வழங்குவதற்கான திட்டத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் 30-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • 👉ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இதுவரை (ஆகஸ்டு 2020) 24 மாநிலங்கள் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மணிப்பூர், உத்தரகாண்ட், நாகாலாந்து ஆகிய மாநிலங்களும், கா ஷ்மீர் யூனியன் பிரதேசமும் இந்த திட்டத்தில் சமீபத்தில் இணைந்ததைத் தொடர்ந்து தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது.மீதமுள்ள மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களும் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கூ.தக. : தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பரிட்சார்த்த முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்

  • 👉”பராக்கா” ( “Barakah” ) என்ற பெயரில் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் முதல் அணு உலை  பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அபுதாபியில் அமைந்துள்ள இந்த அணு உலை  1400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டது. இதனை தென் கொரியாவின் ”Korea Electric Power Corporation (KEPCO)”  உதவியுடன் அந்நாட்டின் “Emirates Nuclear Energy Corporation (ENEC)” உருவாக்கியுள்ளது.

விருதுகள்

  • 👉66 ஸ்கோச் கூடுகை விருதுகளில், “ஸ்கோச் தங்க விருது 2020” (SKOCH Gold Award), மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு (Ministry of Tribal Affairs), ’தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய கல்வி உதவித்தொகை திட்டங்களின் மூலம்  பழங்குடியினரை மேம்படுத்துதல்’ (Empowerment of Tribals through IT enabled Scholarship Schemes) எனும் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  •  👉உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் 1-7 | மையக்கருத்து:  “ஆரோக்கியமான உலகிற்கு தாய்ப்பாலை ஆதரிப்போம்” (support Breastfeeding for a healthier planet)

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • 👉‘Greenlights’  எனும் புத்தகத்தின் ஆசிரியர் - மேத்தீவ் எம்சி கோனாகே (Matthew McConaughey)

--------------------------------------------------------

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.