Todays Current Affairs 30-08-2020
இந்தியா
☛ 1976 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிகபட்ச சராசரி பருவ மழையை இந்தியா 2020 ஆம்
ஆண்டில் பெற்றுள்ளதாக இந்திய வானியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் 2020
ஆம் ஆண்டில் சுமார் 25% சராசரி பருவ மழை பொழிந்துள்ளது. 1976 ஆம் ஆண்டில் 28.4
% சராசரி மழைப்பொழிவைக் கண்டிருந்தது.
கூ.தக. : இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மிக அதிக தேசிய அளவிலான சராசரி
மழைப்பொழிவான 33% மழைப்பொழிவு, 1926 ஆம் ஆண்டில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
☛ சமஸ்கிருதத்திலுள்ள பழம்பெரும் இந்திய அறிவியல் பற்றிய கல்வியை ஐ.ஐ.டி.
இந்தூர் அறிமுகப்படுத்தியுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய ,
பாஸ்கராசார்யாவின் கணித புத்தகமான “லீலாவதி” (‘Lilavati’ ) முதலான பழம்பெரும்
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்களிலிள்ள அறிவியல் இதன் மூலம்
கற்பிக்கப்படவுள்ளது.
விருதுகள்
☛ ’மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்’ (Central Board of Secondary
Education ) 2019-2020 ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருது தமிழகத்தைச்
சேர்ந்த 3 ஆசிரியர்கள் உட்பட 39 ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து விருது பெற்ற ஆசிரியர்களின் விவரம் வருமாறு,
o ஷோபா ராமன் - சென்னை வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர்
o டாக்டர் எஸ். தீபா - ஜி.கே. ஷெட்டி விவேகானந்தர் வி தயாலயா, மேற்கு
அம்பத்தூர்
o வி. பிந்து - ஓசூர் பப்ளிக் பள்ளியின் முதல்வர்
முக்கிய தினங்கள்
☛ சர்வதேச கட்டாயமாக காணாமல் போனவர்களின் தினம் (International Day Of The
Victims Of Enforced Disappearances) - ஆகஸ்டு 30
☛ அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினம் (International Day Against
Nuclear Tests) - ஆகஸ்டு 29
☛ தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) - ஆகஸ்டு 29 (முன்னாள் இந்திய
ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான் சந்த் பிறந்த தினத்தின்
அனுசரிக்கப்படுகிறது.)
விளையாட்டுகள்
☛ தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகரிப்பு :
புதிய பரிசுத்தொகை விவரம்
o ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ரூ. 25 லட்சம் (முன்பு ரூ. 7.5 லட்சம்)
o அர்ஜூனா விருது: ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
o துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனை): ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5
லட்சம்)
o துரோணாச்சார்யா விருது: ரூ. 10 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.