-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 31 August 2020

 Current Affairs Today 31-08-2020
தமிழ்நாடு
☛ நிதிஆயோக் (NITI Aayog ) வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (Export Preparedness Index (EPI) 2020-ல் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம், இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிர மாநிலமும் உள்ளன.
o ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 46 சதவீதமாகவும், ஆடைகள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா
☛ ‘eCommitteesci.gov.in’ என்ற இணையதள சேவையின் மூலம் நீதிமன்றங்களை பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கு ‘இ-கோர்ட்’ முறையை பலப்படுத்தும் நோக்கில், இந்தப் புதிய இணையதளத்தை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் ஒருவர் இருந்த இடத்தில் இருந்தே நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு நிலவரங்களை மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும். உச்ச நீதிமன்றத்தின் ‘இ-கமிட்டி’ இந்த புதிய இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இதற்கு பார்வையற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் நாக்பூரைச் சேர்ந்த ராகுல் பஜாஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஏழுமலை ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
☛ பிக் பஜார்’ (Big Bazaar), ’ஃபுட் பஜார்’ (Food Bazaar) ஆகிய நிறுவனங்கள் உள்ளடக்கிய ”Future Group” எனும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Ltd) கையகப்படுத்தியுள்ளது.
o கூ.தக. : ”Future Group” நிறுவனக் குழுமம் 2013 ஆம் ஆண்டு கிஷோர் பியானி (Kishore Biyani ) என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.
வெளிநாட்டு உறவுகள்
☛ ’காவ்காஷ் 2020’ (Kavkaz 2020) என்ற பெயரில் 15-26 செப்டம்பர் 2020 தினங்களில் ரஷியாவில் நடைபெறும் பன்னாட்டு இராணுவ ஒத்திகையில் பங்கேற்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
விளையாட்டுகள்
☛ ‘ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் 2020’ (Online Chess Olympiad 2020) போட்டியில் இந்தியா மற்றும் ரஷியா நாடுகள் இரண்டும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☛ “Pitching It Straight” என்ற பெயரில் புத்தகத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் குர்சரண் சிங் (Gurcharan Singh) மற்றும் விளையாட்டு பத்திரிக்கையாளர் MS உன்னிகிரிஷ்ணன் (MS Unnikrishnan) ஆகியோர் எழுதியுள்ளனர்.
---------------------------------------------------

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.