-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 3 September 2020

TNPSC Current Affairs Today 3-9-2020
இந்தியா
  • ☛ ”மிஷன் கா்மயோகி” ( Mission Karmayogi - National Programme for Civil Services Capacity Building (NPCSCB)) என்ற பெயரில், மத்திய அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு அதிகாரிகளை தொழில்நுட்பம், புத்தாக்கம், ஆக்கப்பூா்வமாக சிந்தித்தல், தொழில் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் நிறைந்தவா்களாக மாற்றுவதற்கு பயிற்சி அளிப்பதற்காக, மிஷன் கா்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, ஒருங்கிணைந்த இணையவழி பயிற்சித் தளம் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 46 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 2020-21-ஆம் ஆண்டில் இருந்து 2024-25-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.510.86 கோடி செலவிடப்படும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மனிதவள கவுன்சில் அமைக்கப்படும். அதில், சில மத்திய அமைச்சா்கள், சில மாநில முதல்வா்கள், மனிதவள பயிற்சியாளா்கள், சிந்தனையாளா்கள், அரசு அதிகாரிகள் ஆகியோா் இடம்பெறுவா். இந்த கவுன்சில், மத்திய அதிகாரிகளின் நிா்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்களையும், மாற்றங்களையும் கண்டறிந்து, அவா்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவிடும்.
  • ☛ ’ஒரே நாடு - ஒரே ரேசன் அட்டை’ (‘One Nation-One Ration Card’ ) திட்டத்தில் லடாக் மற்றும் லட்சதீவு யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இதுவரை இத்திட்டத்தில் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • ☛ ஜம்மு-காஷ்மீரில் ஆங்கிலமும் உருதும் தற்போது அலுவல் மொழிகளாக உள்ளன. அவற்றுடன் காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி ஆகியவற்றையும் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதற்காக, ஜம்மு-காஷ்மீா் அலுவல் மொழிகள் மசோதா-2020, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும். இந்த மசோதாவுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  •  ☛ உலகின் மிகப் பெரிய ‘சூரிய ஆற்றல் தயாரிப்பு நிறுவனமாக’ (World’s Largest Solar Power Generation Asset Owner) இந்தியாவின் ‘அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்’ (Adani Green Energy Ltd (AGEL)) உருவாகியுள்ளதாக ‘மெர்காம் கேபிடல்’ (Mercom Capital) எனும் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் டெஹ்ரிவித்துள்ளது.
  • ☛ 2019-ஆம் ஆண்டில் தற்கொலைகள் அதிகம் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடத்திலும், மாநகரங்களில் சென்னை முதலிடத்திலும் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau(NCRB)) தெரிவித்துள்ளது.தேசிய அளவில் அதிகம் தற்கொலை நிகழும் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது.
கூ.தக. :
    • 2019 ஆம் ஆண்டில், சாலை விபத்து அதிகமாக நடைபெற்ற மாநிலங்களில் புது தில்லி முதலிடத்திலுள்ளது.
    • 2019 ஆம் ஆண்டில், விவசாயிகள் தற்கொலை அதிகம் நடைபெற்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 2,3 மற்றும் 4 ஆம் இடங்களில் முறையே கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை உள்ளன.
  • ☛ உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 3-9-2020 அன்று ஒய்வு பெற்றார்.
  • ☛ ”பப்ஜி” விளையாட்டு செயலி, பாய்டு, பாய்டு எக்ஸ்பிரஸ், டென்சென்ட் வாச்லிஸ்ட், ஃபேஸ்யு, வீசாட் ரீடிங், டென்சென்ட் வியுன் உள்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு 2-9-2020 அன்று தடை விதித்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டிக்டாக், ஷோ் இட், யூசி பிரௌசா், கேம் ஸ்கேனா், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த ஜூன் 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
  • ☛ அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்களின் வான் எல்லையில் பறந்து ஐக்கிய அரபு அமீரகத்தை அடைவதற்கு சவுதி அரேபிய அரசு 2-9-2020 அன்று அனுமதி வழங்கியுள்ளது.
  • ☛ பேஷ்புக் நிறுவனம் இந்தியாவில் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு (Standing Committee for Information Technology) முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் 2-9-2020 அன்று ஆஜரானார்.
  • ☛  உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள , உலகளாவிய புதுமை குறியீட்டு தரவரிசை பட்டியலில் இந்தியா 48 வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • ☛ ”கிரீன் டெர்ம் அகெட் மார்க்கெட்’ (Green Term Ahead Market (GTAM)) என்ற பெயரில் உலகின் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்புகளுக்கான பிரத்தியேக சந்தை 1 செப்டம்பர் 2020 அன்று மத்திய புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்தினால் தொடங்கி வைக்கப்பட்டது.
அறிவியல் & தொழில்நுட்பம்
  • ☛சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை சோதிக்க பெங்களூருவில் செயற்கை நிலவு பள்ளங்களை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அடுத்த ஆண்டு (2021) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது.இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 215 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரதூர்கா மாவட்டம் சல்லகேர் தாலுகாவில் உள்ள உல்லார்தி காவலுவில் ரூ.24.2 லட்சம் மதிப்பில் 10 மீட்டர் விட்டம், 3 மீட்டர் ஆழத்தில் செயற்கை நிலவு பள்ளங்கள் உருவாக்கப்படுகிறது.செயற்கை பள்ளங்களுடன், சந்திரயான்-3 தரை இறங்குவதற்கான நிலவின் மேற்பரப்பின் மாதிரியை இஸ்ரோ உருவகப்படுத்தும். இதில் லேண்டரின் சென்சார்கள் செயல்திறன் (எல்.எஸ்.பி.டி.) என்ற முக்கியமான சோதனை செய்யப்படும். அதோடு செயற்கை நிலவு தளத்தில் இஸ்ரோவின் சிறிய விமானம் 7 கி.மீ. உயரத்தில் இருந்து ‘சென்சார்’களுடன் தரை இறங்கும்.
வெளிநாட்டு உறவுகள்
  • ☛ ரஷிய தலைநகா் மாஸ்கோவில் 4-9-2020 அன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சோ்ந்த 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களின் சிறப்புக் கூடுகையில் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போா் நிறைவடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு ஆகியவை சார்பில் இந்த சிறப்பு கூடுகை நடைபெறுகிறது.
  • ☛ முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜி மறைவுக்கு வங்கதேசத்தில் ஒரு நாள் அரசுமுறை துக்கம் 2-9-2020 அன்று அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அனைத்து அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும், அங்குள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களிலும் பிரணாப்புக்கு இரங்கல் கூட்டங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
  •  ☛ தாது வளங்கள் துறையில் பின்லாந்துடன் ஒப்பந்தம்: தாது வளங்கள், புவியியல் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க இந்தியாவும் பின்லாந்தும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, புவியியல், தாது வளங்களைக் கண்டறிதல், பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் இரு நாட்டு துறைகளும் ஒத்துழைப்புடன் செயல்படும்.
  • ☛ ஜவுளித் துறையில் இந்தியாவும் ஜப்பானும் ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் ஜவுளி கமிட்டியும், ஜப்பானின் நிசன்கன் தர மதிப்பீட்டு மையமும் புரிந்துணா்வு மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தப்படி, ஜப்பானிய சந்தைகளில் இறக்குமதி செய்வதற்குரிய தரத்துடன் இந்திய ஜவுளிகள் உள்ளனவா என்று நிசன்கன் தர மதிப்பீட்டு மையம் பரிசோதிக்கும். இதன்மூலம், ஜப்பானின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு இந்திய ஜவுளிகளின் தரம் மேம்படுத்தப்படும்.
நியமனங்கள்
  • ☛ ’உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின்’ (Bureau of Civil Aviation Security(BCAS)) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக (Director General(DG)) உஷா பாதி (Usha Padhee) ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
  • ☛ ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள சா்வதேச அளவில் மிகவும் செல்வாக்குமிக்க 40 வயதுக்குள்பட்ட நபா்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவா் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் இருவா் தவிர, தொழில்நுட்பக் கல்வி தொடா்பான பைஜூஸ் செயலியை உருவாக்கிய ரவீந்திரனும் இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
புத்தகங்கள்
  • ☛ ‘The Commonwealth of Cricket: A Lifelong Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ராமச்சந்திர குகா (Ramachandra Guha)
  • ☛  “The One and Only Sparkella” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சான்னிங் டாடும் (Channing Tatum)
முக்கிய தினங்கள்
  • ☛ உலக தேங்காய் தினம் (World Coconut Day) - செப்டம்பர் 2
  • ☛ தேசிய சிறுதொழில்கள் தினம் (National Small Industry Day) - ஆகஸ்டு 30

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.