TNPSC Current Affairs Today 5-9-2020
தமிழ்நாடு
☛ கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் சார்ந்த புதிய விதிகளை இணைத்து,
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ல் திருத்தம் மேற்கொள்ளும் தமிழக
அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்
வழங்கியுள்ளார்
. இதன்படி,
o தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் சமூக
இடைவெளியை கடைபிடிக்க தவறினால் 500 ரூபாயும், முக கவசம் அணியாவிட்டால் 200
ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
o இந்த விதிகளின்படி, நேரத்துக்கு நேரம் அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவுகளை
மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி தனிமைப்படுத்துவது தொடர்பான
உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
o பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 அபராதமும்,
o பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு
ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.
o சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் நிலையான
வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும்,
o கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை
பின்பற்றாத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் மற்றும் அவற்றை பின்பற்றாத வாகனம்
மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
☛ சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே இலந்தகரையிலும் கீழடி போன்று நகர
நாகரீகம் இருந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் உரிய அகழ்வாய்வு
மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்
. இலந்தகரையில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளி, முத்திரை நாணயம், ஆயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய சோழகர் கால நாணயம் கிடைத்துள்ளன. இலந்தகரை 2,500
ஆண்டுகளுக்கு முன்பு, கல், கண்ணாடி பாசிகள் செய்யும் மிகப்பெரிய தொழில் தளமாக
இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இந்தியா
☛ சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக, பருவநிலை மாற்றத்துடன்
தொடர்புடைய தட்பவெப்ப மாற்றங்கள் இருந்திருக்கலாம்
என அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் தொழில் நுட்ப கழகத்திலுள்ள் இந்திய வம்சாவளி
அறிவியல் ஆய்வாளர் நிஷாந்த் மாலிக் என்பவர் தனது ஆய்வு முடிவில்
தெரிவித்துள்ளார். கடந்த 5,700 ஆண்டுகளின் வட இந்தியாவின் பருவநிலை, தட்பவெப்ப
நிலை மாற்றங்களை அவர் புதிய கணித மாதிரி ஆய்வில் கணித்துள்ளார்.
வெளிநாட்டு உறவுகள்
☛ வங்காளதேசத்தின் தாகாண்டி (Daukandi) எனுமிடத்திலிருந்து திரிபுரா
மாநிலத்தின் சோனாமுரா (Sonamura) விற்கு முதலாவது சரக்கு
கப்பல் 3 செப்டம்பர் 2020 வந்தடைந்துள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
☛ இஸ்ரேல் நாட்டின், ஜெருசலேம் நகரில் தொல்லியல் துறை ஆய்வில் 2,500
ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த அரண்மனை கி.மு. 701 மற்றும் 586 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்
கட்டப்பட்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய தினங்கள்
☛ தேசிய ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 (இந்தியாவின்
முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின்
பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது)
விளையாட்டுகள்
☛ 48 வது வருடாந்திர உலக ஓபன் செஸ் (Annual World Open Chess Tournament)
போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பன்னீர்செல்வம் இனியன்
(Panneerselvam Iniyan)
வென்றுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம்
☛ ”Chakr DeCoV" என்ற பெயரில் "என் - 95” (N95) மாஸ்குகளை
மறுபடியும் பயன்படுத்தும் வண்ணம் தானியங்கி முறையில் கிருமி நாசினி செய்யும்
இயந்திரத்தை ஐ.ஐ.டி, தில்லியின் தொழில்முனைவு நிறுவனமான "Chakr Innovation"
கண்டுபிடித்துள்ளது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☛ ”The Little Book of Green Nudges" என்ற மாணவர்களுக்கான
சுற்றுழூழல் விழிப்புணர்வு மற்றும் பசுமை பழக்கங்களை ஏற்படுத்துவதற்கான
புத்தகத்தை ‘ஐ.நா. சுற்றுசூழல் திட்டம்” (United Nations Environment
Programme - UNEP) வெளியிட்டுள்ளது.
☛ ”Invertonomics" எனும் புத்தகத்தின் ஆசிரியர் -கூன்மீத்
சிங் (Goonmeet Singh)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.