Current Affairs for TNPSC Examinations 10-14 October 2020
தமிழகம்
☞இந்தியாவின் மற்றும் தெற்காசியாவின் முதலாவது அதிநவீன உற்பத்தி மையம் (AMHUB - Advanced Manufacturing Hub) தமிழகத்தில் அமையவுள்ளது. இதனை , உலக பொருளாதார மன்றத்துடன் (World Economic Forum (WEF)) இணைந்து, தமிழகத்தின் ‘TN’s Guidance’ அமைப்பு “தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்தி கொள்கை 2020 (Tamil Nadu Electronics Hardware Manufacturing Policy 2020) க்கு இணங்க அமைக்கவுள்ளது.
☞அசிரியம் கல்வெட்டு கண்டு பிடிப்பு : மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மதுரை விமான நிலையம் அருகே கூடல் செங்குளம் கண்மாயில் கண்டுபிடித்துள்ளனர்.
- ஆசிரியம் என்ற சொல்லுக்கு பாதுகாப்பு தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள். இச்சொல் ஆசிரயம், ஆச்சரயம், ஆஸ்ரீயம் என மாறுபட்ட உச்சரிப்புகளுடன் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- மதுரையில் கி.பி.13-14-ம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் இருந்த நிலச்சுவான்தாரர்கள் அவ்வூர் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டுள்ளனர். இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென ஆள் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது.அவ்வாறு செய்வோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்துதல், கோயில் நிர்வாகம், பொதுநிகழ்வுகளை முன்னெடுப்பது தொடர்பான உரிமைகளையும் பெற்றிருந்தனர்.காவல் செய்யும் பாடிகாவல் உரிமை எந்த ஊருக்கு யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் அதை உறுதிப்படுத்தி அறிவிப்பதை ஆசிரியம் கொடுத்தல் என்கின்றனர்
- .இதன்மூலம் கொம்பாடி என்ற நகரத்துக்கு கண்டியதேவர் என்பவர் பாடிகாவலாக இருந்ததை உறுதிப்படுத்தி ஆசிரியம் கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
இந்தியா
☞"இந்திய எரிசக்தி மாதிரி மன்றத்தின் (India Energy Modelling Forum (IEMF)) நிர்வாக கட்டமைப்பை நிதி ஆயோக் அறிவித்துள்ளது. இதன் படி, ’பல்துறை அமைச்சர்கள் குழு’ (inter-ministerial committee) மற்றும் வழிகாட்டும் குழு (steering committee) எனும் இரண்டு வகையான நிர்வாகக் கட்டமைப்புகள் இருக்கும்.
- ’பல்துறை அமைச்சர்கள் குழு’ (inter-ministerial committee) விற்கு நிதி அயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி தலைவராக செயல்படுவார்.
- வழிகாட்டும் குழு (steering committee)வின் தலைவராக ஒருங்கிணைப்பாளர் ( convener) ஒருவர் இரண்டு ஆண்டுகால சுழற்சி பணி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
கூ.தக. :
- தற்போதைய நிதி அயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப்காந்த் (Amitabh Kant) உள்ளார்.
- "இந்திய எரிசக்தி மாதிரி மன்றத்தின் (India Energy Modelling Forum (IEMF)) முதல் ஒருங்கிணைபாளராக (convener) மகாராஷ்டிரத்தின், பூனேவைச் சேர்ந்த பிரயாஸ் குரூப் (Prayas Group) நியமிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : உலகின் முதலாவது புகை கோபுரம் சீனாவில் உள்ளது.
☞ மணிக்கு 130 கி.மீ. அதற்கு மேலும் அதிவேக ரயில்களில் குளிா்சாதன வசதி அல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டு, ஏ.சி.பெட்டிகள் மட்டுமே எதிா்காலத்தில் பொருத்தப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
☞சிபிஐ முன்னாள் இயக்குநா் அஸ்வனி குமார், ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
உலகம்
☞வங்கதேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க அந்த நாட்டு அரசு 12-10-2020 அன்று ஒப்புதல் அளித்தது.
நியமனங்கள்
முக்கிய தினங்கள்
☞பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் (International Day for Disaster Reduction) - அக்டோபர் 13
☞உலக மனநல தினம் (World Mental Health) - அக்டோபர் 10
☞மரண தண்டனைக்கு எதிராக தினம் (World Day Against the Death Penalty) - அக்டோபர் 10
☞உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9
☞உலக முட்டை தினம் (World Egg Day) - அக்டோபர் 9
☞சா்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child) - அக்டோபர் 11
விருதுகள்
☞இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டன் தூதராக தில்லியைச் சோ்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் (18) 7-10-2020 அன்று நியமிக்கப்பட்டாா். உலகம் முழுவதும் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதை வலியுறுத்தும் தூதரக நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அவருக்கு அந்த ஒரு நாள் அடையாளப் பதவி வழங்கப்பட்டது.
☞அமைதிக்கான நோபல் பரிசு 2020 உலக உணவு திட்ட அமைப்புக்கு (World Food Programme (WFP)) அறிவிக்கப்பட்டுள்ளது.58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : உலக உணவுத் திட்டம் (World Food Programme; WFP) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் (United Nations General Assembly) ஒரு பிரிவு ஆகும். 19 டிசம்பர் 1961 ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையிடம் ரோம் நகரில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய தலைவராக, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பீஸ்லி (David Beasley) உள்ளார்.
☞பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2020, ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக , அமெரிக்க நிபுணா்கள் பால் ஆர்.மில்க்ரோம் (Paul R Milgrom) மற்றும் ராபர்ட் பி.வில்சன் (Robert B Wilson) ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
☞இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
☞அமெரிக்காவை சேர்ந்த டீன் ஏஜ் சிறுமி மேசி கர்ரீன் உலகின் மிக நீண்ட கால்களை கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இவர் 6 அடி 10 அங்குலம் உயரம் கொண்டு இருக்கிறார். இவரது கால்கள் இரண்டும் 4 அடி நீளம் உள்ளன.
விளையாட்டு
☞124 வது ஃபிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி 27-9-2020 முதல் 11-10-2020 வரையில் நடைபெற்றது. அந்த போட்டிகளில் வென்றவர்களின் விவரம் வருமாறு,
- ஆண்கள் ஒற்றையர் - ரஃபேல் நடால், ஸ்பெயின்
- பெண்கள் ஒற்றையர் - இகா ஸ்வியாடெக் (Iga Swiatek), போலந்து
- ஆண்கள் இரட்டையர் - கெவின் கிராவியட்ஸ் (Kevin Krawietz), ஜெர்மனி மற்றும் ஆண்டிரியாஸ் மியஸ் (Andreas Mies), ஜெர்மனி
- பெண்கள் இரட்டையர் (Women’s Doubles) -டிமியா பாபோஸ் (Timea Babos), ஹங்கேரி மற்றும் கிறிஸ்டினா மிலாடினோவிக் (Kristina Mladenovic), பிரான்ஸ்
அறிவியல் தொழில்நுட்பம்
☞”காபென்13” என்ற பெயரில், புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை, சீனா , 12-10-2020 அன்று வெற்றிகரமாக , மார்ச்3 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பேரழிவு தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.
☞உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, முதல் கதிர்வீச்சுக்கெதிரான ஏவுகணையான ( Anti-Radiation Missile) ‘ருத்ரம்-1’ (RUDRAM 1) ஏவுகணை சுகோய்-30 போர் விமானத்திலிருந்து (Sukhoi-30 Fighter Aircraft) மூலம் 9-10-2020 அன்று ஒடிசாவின் பாலாசோரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.எதிரி நாடுகளின் ரேடார்கள், ஜாமர்கள், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி அழிக்கும் வகையில் ‘ருத்ரம்-1’ என்ற ஏவுகணையை இந்தியாவின் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கி உள்ளது. ருத்ரம்-1 ஏவுகணையை ஒலியின் வேகத்தைப் போல் இரண்டு மடங்கு வேகத்தில் செலுத்த முடியும். இத்தகைய ஏவுகணையானது முதல் முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.