-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 26-27 October 2020

 Current Affairs for TNPSC Exams 26-27  October 2020 

தமிழகம்

  • கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட வசதியாக ஐந்து தனித்தனி குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியா்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நியமனக் குழு, வளா்ச்சிக் குழு, 

    • வேளாண்மை மற்றும் நீா்வள மேலாண்மைக் குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • நியமனக் குழுவில் கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் இருக்க வேண்டும். அரசு விதிகளுக்கு உட்படாமல் எந்தவொரு நியமனமும் செய்ய இயலாது. 

    • வளா்ச்சிக் குழுவில் ஒன்பது போ் அங்கம் வகிப்பா். தலைவராகத் தொடா்புடைய ஊராட்சியின் பெண் வார்டு உறுப்பினா்களில் ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் குடிநீா் வழங்கும் நிலையங்களை மேற்பார்வையிடுதல், தடுப்பூசி முகாம்கள் நடத்துதல், சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய வேலைகளை கண்காணிப்பது இந்தக் குழுவின் பணியாக இருக்கும்.

    • வேளாண்மை மற்றும் நீா்வள மேலாண்மைக் குழு, ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வேளாண்மை மற்றும் நீா்வளங்களைப் பெருக்கிடும் வழிவகைகளைக் கண்டறியும் பொருட்டு அமைக்கப்படுகிறது. இதில், ஏழு உறுப்பினா்கள் அங்கம் வகிப்பா். 

    • பணிகள் குழு , ஒவ்வொரு ஊராட்சியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு உதவிடும் வகையில் அமைக்கப்படுகிறது.

    • கல்விக் குழு, ஒவ்வொரு ஊராட்சியிலும்  அமைக்கப்பட வேண்டும். ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடையச் செய்தல் போன்ற பணிகளை இக் குழு மேற்கொள்ளும்.

கூ.தக. : நியமனக் குழு தவிர்த்து, மற்ற குழுக்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் கிராம ஊராட்சிக் குழுக்களின் பரிந்துரைகளைத் தொகுத்து ஜனவரி முதல் மார்ச் மாதத்திலான காலாண்டில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

  • தமிழக அரசின் ‘யாதும் ஊரே’ முன்னெடுப்பின் தொடா்ச்சியாக, 29-31 அக்டோபர் 2020 ஆகிய மூன்று நாள்களுக்கு உலகத் தமிழா்களை ஒன்றிணைக்கும் இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.தமிழக அரசு, தென்னிந்திய தொழில் வா்த்தக சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன. 

கூ.தக. : வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்க, கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கு ‘யாதும் ஊரே’ என்ற முயற்சியைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. 

  • ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’  திட்டம் :  தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மாநில பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் செயல்படுத்தவுள்ளது.

    • ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ எனும் பெயரில் இந்தத் திட்டம் வரும் நவம்பா் மாதம் முதல் முற்றிலும் தன்னார்வலா்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக, கிராமம், வாா்டு வாரியாக, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் குடும்ப விவரம் மற்றும் சா்வே அடிப்படையில் ‘கல்வி நிலை’ என்ற பகுதியில் 15 வயதுக்குமேற்பட்டோரின் விவரங்கள் சேகரிப்பட உள்ளன. மகளிா் சுய உதவிக் குழு, நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளா்கள், ஆசிரியா்கள், சாரண, சாரணியா், தேசிய மாணவா் படை, கிராம கல்விக் குழு, ஒன்றிய அளவில் சிறப்பாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்களைக்கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

    • அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், ‘கற்போா் கல்வியறிவு’ மையங்களாகச் செயல்படும். வரும் நவ. 23-ஆம் தேதிக்குள் இந்த மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும், குறைந்தபட்சம் 20 பேருக்கு அடிப்படை எழுத்தறிவைப் புகட்ட வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற எவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து தங்களின் கற்பித்தல் சேவையை வழங்கலாம். பள்ளி மேலாண்மை குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலமாக இவா்களின் விவரங்களை நவ. 11-ஆம் தேதிக்குள் திரட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குறைந்தபட்சம் 20 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கி, தோ்ச்சி பெற வைக்கும் தன்னாா்வலா்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ் வழங்குவாா். ஓா் கல்வியாண்டில் மே முதல் ஆகஸ்ட் வரை, செப்டம்பா் முதல் டிசம்பா் வரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை என மூன்று கட்டங்களாக இந்த மையங்கள் செயல்படும்.

    • ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் நடைபெறும். ஒவ்வொரு கட்ட இறுதியிலும், தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனத்தின் மூலமாக இறுதி மதிப்பீட்டு தோ்வு நடத்தப்படும். வேலை உறுதி திட்டம், அரசு மற்றும் அரசு சாரா மற்றும் பொதுப்பணித்துறையில் பணிபுரிவோருக்கு அவரவா் பணியிடத்திலேயே ஏதுவான நேரத்தில் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கூ.தக. : தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,15 வயதுக்கு மேற்பட்ட 1.24 கோடி போ் முற்றிலும் படிக்கவும், எழுதவும் தெரியாதவா்களாக உள்ளனா்.  

  • ஆசிய வளா்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநரும், மொழிபெயா்ப்பாளருமான கே.எஸ்.சுப்பிரமணியன் (83)  காலமானார். மறைந்த எழுத்தாளா் ஜெயகாந்தனின் படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயா்த்த அவா், தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் ஓா் இலக்கியப் பாலமாகவே திகழ்ந்தார். தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழி இலக்கியங்களையும் ஒப்பிட்டு ‘சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற தலைப்பில் ஒரு நூலையும் தந்திருக்கிறார்.


இந்தியா

  • இந்தியாவின் முதல் ‘மணல்மேடு பூங்காக்களை’ (Sand Dune Park) கோவாவில் அமைப்பதற்காக உலக வங்கி ரூ.3 கோடி நிதியுதவியை வழங்கவுள்ளது. 

  • ஒன்பதாவது சீக்கிய குரு ‘குரு தேஜ் பகதூர்’ (Shri Guru Tegh Bahadur) அவர்களின் 400 வது பிறந்த தினக் (1 ஏப்ரல் 1621ல் பிறந்தவர்) கொண்டாட்டத்தை மத்திய அரசு சார்பில் நடத்துவதற்கான உயர்மட்ட குழுவானது பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

உலகம்

  • செஷல்ஸ் (Seychelles) நாட்டின் அதிபராக  இந்திய வம்சாவழியைச் சேர்ந்த  வேவல் ராம்கலவான் (Wavel Ramkalawan) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

  • கினியா (Guinea) நாட்டின் அதிபராக ஆல்ஃபா கொண்டே (Alpha Condé) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

  • ’ஃபொலிவியா’ (Bolivia) நாட்டின் அதிபராக  லூயிஸ் ஆல்பர்ட்டோ லுச்சோ ஆர்க் (Luis Alberto “Lucho” Arce) தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 

  • ’முகக்கவசம் இல்லையெனில் சேவை இல்லை’ ( No Mask No Service Policy ) என்ற கொள்கையை  வங்காளதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, முகக்கவசம் அணியாத எந்த நபருக்கும் எந்தவொரு  அரசு சேவைகளும் வழங்கப்படமாட்டாது. 

முக்கிய தினங்கள்

  • சர்வதேச ராஜதந்திரிகள் / தூதுவர்கள் தினம்   (International Day of Diplomats)  - அக்டோபர் 24 

  • உலக போலியோ தினம் (World Polio Day) - அக்டோபர் 24 

  • ஐ.நா.  ஆயுத குறைப்பு வாரம் (United Nations (UN)  Disarmament Week) - 24-30 அக்டோபர்  

  • விஜிலன்ஸ் (விழிப்புக்காவல்) விழிப்புணர்வு வாரம் 2020 (Vigilance Awareness Week) - 27 அக்டோபர் 2020 - 2 நவம்பர் 2020 

புத்தகங்கள் / ஆசிரியர்கள் 


  • “The Fixer: Winning Has A Price. How Much Will You Pay?” என்ற நூலின் (நாவல்) ஆசிரியர் - சுமன் துபே (Suman Dubey)

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.