Current Affairs for TNPSC Exams 4-5 October 2020
இந்தியா
☞ வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2020 (Foreign Contribution (Regulation) Amendment Act, 2020 ) செப்டம்பர் 29, 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 (Foreign Contribution Regulation Act, 2010 (FCRA)) மீது திருத்தம் மேற்கொண்டுள்ள இந்த சட்ட திருத்தத்தின் மூலம் , அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை பெற்றுக் கொள்வதது மற்றும் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.
☞ ”சுநிதி” (Superior New-generation Information and Data Handling Initiative (SUNIDHI)) என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டத்தை நிலக்கரி சுரங்க வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Coal Mines Provident Fund Organisation (CMPFO)) தொடங்கியுள்ளது.
☞ ‘பழங்குடியினர் இந்தியா மின்-சந்தை’(‘Tribes India E-Marketplace’ (market.tribesindia.com) என்ற பெயரில், இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கரிம பொருட்கள் ஆன்லைன் சந்தையை அக்டோபர் 2, 2020 அன்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார். இது இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் (Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFED)) ஒரு முன்முயற்சியாகும்.
☞ ”RAISE 2020” என்ற பெயரில் உலக அளவிலான செயற்கை நுண்ணறிவு கூடுகையை (Artificial Intelligence Summit) பிரதமர் மோடி அவர்கள் இணையவழியில் 5-10-2020 அன்று தொடங்கி வைக்கிறார். இந்த கூடுகையை இந்திய அரசுடன் இணைந்து அகதமியா மற்றும் தொழில்கள் ( academia and industry) நிறுவனம் நடத்துகிறது.
☞ “செளரியா ஏவுகணையின்” (Shaurya missile) புதிய பதிப்பை 3-10-2020 அன்று இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation-DRDO) உருவாக்கிய இந்த ஏவுகணையானது, சஹாரிகா கே-15 ஏவுகணையின் (Sagarika K-15 missile) நிலத்தில் செலுத்தக்கூடிய மாதிரியாகக் கருதப்படுகிறது. அணுசக்தியால் இயங்கவல்லதும், நீர் மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தத்தக்கதுமான இந்த ஏவுகணையானது 700 கி.மீ. முதல் 1000 கி.மீ வரையிலான இலக்குகளைச் சென்று தாக்கும். இந்த ’“செளரியா ஏவுகணை” களை எதிரி செயற்கைக்கோள்களிலிருந்து மறைத்து வைக்கலாம்.
☞ இந்தியாவின் முதல் விலங்குகள் ஓடுபாதைகள் (animal overpasses) டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் (Delhi-Mumbai Expressway) அமைக்கப்பட்டு வருகிறது.
☞ முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகளை தோ்ல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, தபால் வாக்குப் பதிவை தோ்வு செய்யும் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, தோ்தல் வாக்குப் பதிவு நாள் அறிவிக்கப்பட்ட 5 நாள்களுக்குள் தபால் வாக்குப் பதிவுக்கான 12டி படிவத்தை வாக்குச் சாவடி அதிகாரி எடுத்துச் சென்று, அதனைப் பூா்த்தி செய்து பெற்று வர வேண்டும். பின்னா், அந்தப் படிவத்தை தோ்தல் நடத்தும் அதிகாரி முன்பாக சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
☞ மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் காரணமாக 99 சதவீத இந்திய நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை என்பதும் ஒருவர் கூட திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பது இல்லை என்றும் சமீபத்திய ஆய்வுகளின்படி, தெரியவந்துள்ளது.
கூ.தக. : மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று (அக்டோபர் 2) தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தது.
☞ உலகின் மிக நீளமான (9 கிலோ மீட்டர்) அடல் சுரங்கப்பாதையை இமாச்சல் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3-10-2020 அன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.
-
அடல் சுரங்கப்பாதையை திறந்துவைத்ததன் மூலம் மணாலி - லே இடையிலான பயண தூரம் 40 கிலோ மீட்டர் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரோட்டங் பகுதியில் 9.02 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள சுரங்கப்பாதையால் பயண நேரம் 5 மணிநேரம் வரை குறைய வாய்ப்புள்ளது.
-
இந்த சுரங்கப்பாதை ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூ.4,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
-
கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் 10 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக, குதிரை லாடம் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் வரை செல்ல முடியும் .
உலகம்
☞ ‘அலெக்ஸ்’ புயல் : பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
☞ அமெரிக்காவின் ‘கல்பனா சாவ்லா’ விண்கலம் 2-10-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சா்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையைான பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த விண்கலத்தை அமெரிக்காவின் நாா்த்ராப் கிரமன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த விண்கலத்தில், விண்வெளியில் நடக்கும்போது பயன்படுத்துவதற்கான 360 டிகிரி கோண கேமரா, பெண்களுக்கு ஏற்ற வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கழிவறை, பல வகையான உணவுப் பொருள்கள், விண்வெளியில் பயிரிடுவதற்கான முள்ளங்கி விதைகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது.
☞ எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
☞ பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா தீவுகள் மாறுவது குறித்து வாக்கெடுப்பு 4-10-2020 அன்று நடைபெற்றது. பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் நியூ கலிடோனியா தீவுக்கூட்டம் பாரிஸில் இருந்து 16,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
☞ இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் கசிந்து வருவதைக் கண்காணிக்க இந்தியாவும் பிரான்சும் கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் திரளை (constellation of maritime surveillance satellites) அனுப்பவுள்ளன. இதற்காக, ஆகஸ்ட் 2020 இல், இஸ்ரோ (ISRO) மற்றும் பிரெஞ்சு விண்வெளி முகமை (National Centre for Space Studies (CNES)) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
☞ ராணுவ விமான உதிரி பாகங்கள் உட்பட ரூ.660 கோடி பெறுமான உபகரணங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகமான பெண்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய தினங்கள்
☞ உலக பண்ணை விலங்குகள் தினம் (World Day for Farmed Animals ) - அக்டோபர் 2
☞ சர்வதேச ஆசிரியர்கள் தினம் (International Teachers Day) - அக்டோபர் 5
☞ உலக வாழ்விட தினம் (World Habitat Day) - அக்டோபர் 5
☞ தேசிய வனவிலங்குகள் வாரம் (National Wildlife Week) - அக்டோபர் 2-8
அறிவியல் தொழில்நுட்பம்
☞ "எரியோகாலான் பர்விசெபாலம்” (Eriocaulon parvicephalum) மற்றும் "எரியோகாலான் சினேரியம்" (Eriocaulon karaavalense) ஆகிய இரண்டு புதிய பைப்வோர்ட் தாவர வகைகளை, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் பூனாவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவன (Agharkar Research Institute (ARI), Pune) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அவற்றில் எரியோகாலான் சினேரியம் என்று அழைக்கப்படும் தாவர இனத்தில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ குணம் உள்ளது.
விருதுகள்
☞ “மாற்று நோபல் பரிசு” (Alternative Nobel Prize) என்றும் அழைக்கப்படும் ”ரைட் வாழ்வாதார விருது 2020” (Right Livelihood Award) பெலாரஸின் அலெஸ் பியாலியாட்ஸ்கி (Bialiatski ), ஈரானின் நஸ்ரின் சோட்டடெ(Nasrin Sotoudeh), அமெரிக்காவின் பிரையன் ஸ்டீவன்சன் (Bryan Stevenson) மற்றும் நிகரகுவாவைச் சேர்ந்த லோட்டி கன்னிங்ஹாம் ரென் (Lottie Cunningham Wren) ஆகிய நான்கு சமூக செயல்பாட்டாளர்களுக்காக அவர்தம் சமத்துவம், ஜனநாயகம், நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிற்கான பங்களிப்புக்காக ’ரைட் வாழ்வாதார விருது பவுண்டேசன்’ (Right Livelihood Award Foundation) வழங்கியுள்ளது.
☞ ஐக்கிய நாடுகளவை நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் செயல்பாட்டு விருதுகள் 2020 (United Nations Sustainable Development Goal (UNSDG) Action Awards 2020) ல் , "ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு நடவடிக்கை மற்றும் முழுமையான தீர்வு அணுகுமுறை - தொழில்" (“Integration, Convergence, Joint Action and holistic Solution Approach – Industry”) பிரிவுக்கான விருதை இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு பவுண்டேசன் (Confederation of Indian Industry Foundation) மற்றும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development (NABARD)) வங்கி ஆகியவை வென்றுள்ளன. இந்த விருதை, ஐ.நா.வளர்ச்சி திட்டம் ( United Nations Development Programme (UNDP) ) மற்றும் பஞ்சாப் மாநில அரசு இணைந்து வழங்கியுள்ளன.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☞ “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஆனந்த் நீலகண்டன் (Anand Neelakantan)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.