ANNA CENTENARY CIVIL SERVICES COACHING ACADEMY Screening Test Application For Free Coaching (Civil Services Prelims exam – 2021)
பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம் மூலமாக ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு மாதம் ரூ.3,000/- அரசு உதவித்தொகையுடன் முழு நேர இலவசப்பயிற்சி 15.02.2021 முதல் துவக்கவுள்ளது.
27.06.2021 தேதியன்று யு.பி.எஸ்.சி யால் நடத்தப்படவுள்ள குடிமைப்பணி முதனிலைத் தேர்விற்கான பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு , மாணவர் விடுதியில் தங்குமிடம் (வெளி மாவட்ட மாணவ, மாணவியர் 60 நபர்கள்) மற்றும் மாத உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு 30-01-2021 சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை பாரதியார் பல்கலைக கழக வளாகத்தில் நடைபெறும். நுழைவுத் தேர்வு யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு அடிப்படையில் நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது ?
நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பம், நுழைவுச்சீட்டு, கல்விச்சான்று மற்றும் சாதிச்சான்று மற்றும் ரூ.5/- அஞ்சல் முத்திரை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதப்பட்ட அலுவலக கவர் இணைத்து 05.01.2021 தேதிக்குள் “ஒருங்கிணைப்பாளர்,பயிற்சி இயக்குநர் அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம், நாச்சிமுத்து அரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Application form from official website
Official Website link
Hi mam entrance exam questions r based about abtitude or general studies
பதிலளிநீக்கு