-->
TNPSC Portal
Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Bharathiar University Anna Centenary Civil Service Coaching Academy Free Coaching Admission Notification

ANNA CENTENARY CIVIL SERVICES COACHING ACADEMY Screening Test Application For Free Coaching (Civil Services Prelims exam – 2021)
பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம் மூலமாக  ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு மாதம் ரூ.3,000/- அரசு உதவித்தொகையுடன்  முழு நேர இலவசப்பயிற்சி  15.02.2021 முதல் துவக்கவுள்ளது.

27.06.2021 தேதியன்று யு.பி.எஸ்.சி யால் நடத்தப்படவுள்ள குடிமைப்பணி முதனிலைத் தேர்விற்கான பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு , மாணவர் விடுதியில் தங்குமிடம் (வெளி மாவட்ட மாணவ,  மாணவியர் 60 நபர்கள்)  மற்றும் மாத  உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சிக்கான  நுழைவுத் தேர்வு 30-01-2021 சனிக்கிழமை காலை 11.00 மணி  முதல் பிற்பகல் 01.00 மணி வரை பாரதியார் பல்கலைக கழக வளாகத்தில்  நடைபெறும். நுழைவுத் தேர்வு யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு அடிப்படையில்  நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது ?

 நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பாரதியார்  பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள  விண்ணப்ப படிவத்தை  தரவிறக்கம் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பம், நுழைவுச்சீட்டு,   கல்விச்சான்று  மற்றும் சாதிச்சான்று மற்றும் ரூ.5/- அஞ்சல் முத்திரை ஒட்டப்பட்ட சுயமுகவரி  எழுதப்பட்ட அலுவலக கவர் இணைத்து 05.01.2021 தேதிக்குள்  “ஒருங்கிணைப்பாளர்,பயிற்சி இயக்குநர் அண்ணா நூற்றாண்டு நினைவு  குடிமைப்பணியியல் பயிற்சி மையம், நாச்சிமுத்து அரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Download Application form from official website 


Official Website link

1 கருத்து உள்ளது

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.