தமிழகம்
☛ பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம், அரியலூர் மாவட்டம் அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பம் ஆகியவற்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா
☛ பீகாரில் சோன் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள ரூ 266 கோடி மதிப்பிலான 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று வழி கோயில்வார் பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி காணொலி மூலம் 10.12.2020 அன்று திறந்து வைத்தார்.
☛"ஃபிட்னஸ் கா டோஸ், ஆதா கன்டா ரோஜ் (Fitness Ka Dose Aadha Ghanta Roz) (தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்) என்னும் பிரச்சாரத்தின் மூலம் உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் இந்தியாவின் முன்னெடுப்பை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.
☛ 2020-ஆம் ஆண்டில் இந்தியா்கள் கூகுளில் அதிகம் தேடிய வாா்த்தையாக ‘ஐபிஎல்’ உள்ளது. “கரோனா தொற்று” இந்தியாவில் கூகுள் தேடலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
☛ ஐ.ஐ.டி மும்பை வெளியிட்டுள்ள நகர்ப்புற வாழ்க்கைத் தர அட்டவணை 2020 (Urban Quality of Life (UQoL) Index 2020) ல் முதல் நான்கு இடங்களை முறையே, மும்பை (மகாராஷ்டிரா), டெல்லி, கொல்கத்தா (மேற்கு வங்கம்) மற்றும் சென்னை (தமிழ்நாடு) ஆகியவை பெற்றுள்ளன.
☛ ஸ்டேட் ஃபாங் ஆப் இந்தியா (State Bank of India) வெளியிட்டுள்ள இந்திய அளவில் கோவிட்-19 தொற்று நோயை நிர்வகிப்பதில் முதல் பத்து இடங்களை முறையே 1.வடகிழக்கு இந்தியா மாநிலங்கள் (அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் சேர்ந்து) , 2.பீகார், 3.உத்தரப்பிரதேசம், 4.ஒடிஷா, 5.ஜார்க்கண்ட், 6.தெலுங்கானா, 7.தமிழ்நாடு, 8.ஆந்திரா,9.கோவா மற்றும் 10.ஜம்மு காஷ்மீர் ஆகியவை பெற்றுள்ளன.
☛ சாலை உள்கட்டமைப்பு துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து ஆஸ்திரியாவின் காலநிலை நடவடிக்கை, சுற்றுச்சூழல், எரிசக்தி, இயக்கம், புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்(Ministry of Road Transport and Highways (MoRTH)) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
☛ இ-நீதிமன்றங்கள் திட்டத்தின் (eCourts Mission Mode Project) கீழ் நாடு முழுவதும் 2927 நீதிமன்ற வளாகங்கள், அதிவேக பெரும் பரப்பு வலையமைப்பு (Wide Area Network (WAN)) மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 2992 நீதிமன்றங்களிலும், டிஜிட்டல் நெட்வொர்க் ஏற்படுத்தும் திட்டத்தை, மத்திய நீதித்துறையும், உச்சநீதிமன்றக் குழுவும் வகுத்தது. இந்த டிஜிட்டல் இணைப்பில், கண்ணாடி நார் இழை வயர்கள், ரேடியோ அலைகள், விசாட் என்ற மூன்று முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
☛ இந்திய ரயில்வே, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு சோதனைத் திட்டம் (Indian Railways Hospital Management Info System) , தெற்கு மத்திய ரயில்வே ண்டலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
☛ இளம் கணித மேதைக்கான ராமானுஜன் பரிசு (Ramanujan Prize for Young Mathematicians 2020) பிரேசிலைச் சேர்ந்த டாக்டர் கரோலினா அராஜோவுக்கு (Dr. Carolina Araujo) வழங்கப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் ராமானுஜன் பரிசு பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவாக, இளம் கணித மேதைக்கான பரிசை, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையானது(Department of Science and Technology of the Government of India), கோட்பாடு இயற்பியலுக்கான சர்வதேச மையம் (International Centre for Theoretical Physics), சர்வதேச கணிதச் சங்கம்(International Mathematical Union) ஆகியவற்றுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
☛ சிந்து தொழில்முனைவோர் (The Indus Entrepreneurs (TiE)) உலகளாவிய உச்சி மாநாடு -2020 ( Global Summit Summit-2020) காணொலிக்காட்சி மூலம் 8-10 டிசம்பர் 2020 தினங்களில் நடைபெற்றது. இம்மாநாட்டின் மையக்கருத்து - ‘தொழில் முனைவோர் 360’(Entrepreneurship 360) என்பதாகும்.
☛ ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய பரிசு 2020, இந்தியன் எக்ஸ்பிரஸின் தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான ராஜ் கமல் ஜா (Raj Kamal Jha) வின் இலக்கிய புனைகதை நாவலான ‘தி சிட்டி அண்ட் தி சீ’ (The City and the Sea) க்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகம்
☛ அமெரிக்க ஜனநாயக கட்சியின் சக்திவாய்ந்த பிரிவான காங்கிரஸின் முற்போக்கு காகஸின் (U.S. Congressional Progressive Caucus) தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காங்கிரஸ் பெண்மணி பிரமிளா ஜெயபால் (Pramila Jayapal) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
☛ 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு (Carbon dioxide emissions) 7% குறைந்துள்ளதாக ’உலக கார்பன் திட்டம்’ (Global Carbon Project) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
☛ டைம் பத்திரிக்கையின் 2020ம் ஆண்டின் சிறந்த நபா்களாக (TIME's Person of the Year 2020 ) அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகத் தோ்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
☛ கானா அதிபர் தேர்தலில் நானா அகுபோ வெற்றிபெற்று, மீண்டும் அதிபராக தேர்வாகிறார்.
வெளிநாட்டு உறவுகள்
☛ இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க மெய்நிகர் உச்சிமாநாடு 11.12.2020 அன்று நடந்தது.
☛ போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து, இந்தியா - மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம் காணொலி காட்சி மூலம் 10-12-2020 ம் தேதி நடந்தது.
விளையாட்டு
☛ 2020 இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) விளையாட்டுத் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களாக முறையே மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா(Bajrang Punia) மற்றும் ஷூட்டர் எலாவெனில் வலரிவன்(Elavenil Valarivan) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூ.த.: 1927 இல் நிறுவப்பட்ட இந்திய வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய தலைவராக உதய் சங்கர் உள்ளார்.
முக்கிய தினங்கள்
☛ மனித உரிமைகள் தினம் -டிசம்பர் 10 | மையக்கருத்து (2020) -“சிறந்ததை மீட்டெடுங்கள் - மனித உரிமைகளுக்காக நில்லுங்கள்” (Recover Better - Stand Up for Human Rights).
☛ சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் (International Anti-Corruption Day) - டிசம்பர் 9
☛ சர்வதேச மலை நாள் - டிசம்பர் 11 | மையக்கருத்து (2020 ) - மலை பல்லுயிர் (Mountain Biodiversity)
☛ ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதிய (United Nations Children's Fund) தினம் - டிசம்பர் 11 (ஐ.நா. பொது சபையினால் UNICEF அமைப்பு தொடங்கப்பட்ட தினம் - 11 டிசம்பர் 1946)
☛ மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் - டிசம்பர் 11 (11 டிசம்பர், 1882)
அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
☛ உலகில் முதன்முறையாக செயற்கைக்கோள் அடிப்படையிலான நாரோ பேண்ட் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் நெட்வொர்க்கை (NB-IoT (Narrow Band-Internet of Things))அடிப்படையிலான சேவையைத் துவக்க பிஎஸ்என்எல் நிறுவனம் ஸ்கைலோடெக் இந்தியா (Skylotech India) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பமானது, இந்திய கடல் பகுதிகள், காஷ்மீரின் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வரையிலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தனது சேவையை வழங்கும்.
☛ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் ( Defence Research and Development Organsiation(DRDO)) தயாரித்த, கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. புனேவில் உள்ள டிஆர்டிஓ மையம் இதனை வடிவமைத்துள்ளது.
☛ 2024 ஆம் ஆண்டில் நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்காக நாசாவால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 விண்வெளி வீரா்கள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ராஜா ஜான் உா்புதூா் சாரி (Raja Jon Vurputoor Chari) இடம் பெற்றுள்ளாா்.
☛ இந்தியாவில் எரிசக்தி சேமிப்பில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டணி (India Energy Storage Alliance (IESA) மற்றும் ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (United Nations Industrial Development Organization (UNIDO)) ஆகியவை 10.12.2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
why i cannot download in daily current affairs 2020
பதிலளிநீக்குWhy I can't download the current affairs
பதிலளிநீக்குhttps://www.tnpscportal.in/2014/06/tnpsc-current-affairs-in-tamil-june-2014.html
நீக்கு