-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 15-20 December 2020

 தமிழ்நாடு

👉 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

👉 ‘கட்டிடமே கற்றல் உபகரணம்' (Building as Learning Aid) திட்டம் : தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்  பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க  'பாலா' (BaLA) /   ‘கட்டிடமே கற்றல் உபகரணம்' (Building as Learning Aid)   எனப்படும்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

👉அசுரன், தேன் ஆகிய தமிழ் திரைப்படங்கள்  16-24 ஜனவரி 2021 தினங்களில் கோவாவில் நடைபெறவிருக்கும்  51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

 

இந்தியா

👉 ’2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த சமூக தொழில்முனைவோர் விருது’ ( Social Entrepreneur of the Year Award – India 2020)  பிராவத்(Pravah) எனும் அமைப்பைச் சேர்ந்த ஆஷ்ரஃப் படேல் (Ashraf Patel) மற்றும்  ComMutiny Youth Collective (CYC) எனும் அமைப்பிற்கு  வழங்கப்பட்டுள்ளது. இதனை  உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) துணை நிறுவனமான சமூக தொழில்முனைவிற்கான  ஸ்வாப் பவுண்டேஷன் (Schwab Foundation for Social Entrepreneurship) மற்றும் ஜீபிலண்ட் பாரதியா பவுண்டேசன் (Jubilant Bhartia Foundation ) இணைந்து வழங்கியுள்ளன. 

👉தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில்  அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கிக் கிளைகளிலிருந்து ரூபாய் நோட்டுகளைப் பெற்று அதனை தரம் பிரித்து மேலாண்மை செய்வது மற்றும் அழுக்கடைந்த நோட்டுகளை அழிப்பது உள்ளிட்ட பணிகளை தானியங்கி முறையில் ஏபிபிசி மையம் மேற்கொள்ளும்.

👉நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாட்டின் (Sustainable Mountain Development Summit (SMDS)) ஒன்பதாவது பதிப்பு 12-12-2020  அன்று டெஹ்ராடூனில் நடைபெற்றது. 

👉  உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை (Renewable Energy Park) குஜராத்தின் கட்ச் எனுமிடத்தில் அமைப்பதற்கான அடிக்கல்லை  பிரதமர் மோடி அவர்கள் 15-12-2020 அன்று நாட்டினார்.  

👉  5 வது இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு (India Water Impact Summit)  2020 10-15 டிசம்பர் 2020 தினங்களில் “ஆர்த் கங்கா - நதி பாதுகாப்பு ஒத்திசைக்கப்பட்ட வளர்ச்சி”( “Arth Ganga – River Conservation Synchronised Development”) எனும் மையக்கருத்துடன் நடைபெற்றது. இதனை கங்கை நதி படுகை மற்றும் ஆராய்ச்சி மையம் (Center for Ganga River Basin Management and Studies (cGanga))  மற்றும் தேசிய தூய்மை கங்கை திட்டம் (National Mission for Clean Ganga ) ஆகியவை இணைந்து நடத்தின. 

👉பணியின் போது உடல் ஊனமுற்ற படை வீரர்கள்ளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய உடல் ஊனமுற்றோர் அதிகாரமளித்தல் மையம் (National Centre for Divyang Empowerment) எனும் அமைப்பை  மத்திய ரிசர்வ் போலிஸ் படையினால் (Central Reserve Police Force (CRPF)  தெலுங்கானாவிலுள்ள  ஹாக்கிம்பேட் (Hakimpet) எனுமிடத்தில் 10-12-2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது. 

👉”பிராண்ட் இந்தியா திட்டம்” (‘Brand India’ mission) எனும் பெயரில், இந்தியாவில்  உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த பொருட்களின் சந்தையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தினால் தொடங்கப்படவுள்ளது. 

👉நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு  ஜனவரி 23, 2022 அன்று இந்திய அரசு ஒரு அருங்காட்சியகத்தை கொல்கத்தாவில் திறக்க உள்ளது.

👉”ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு” ( Steel Authority of India Limited (SAIL)) 2020-ஆம் வருடத்துக்கான தங்க மயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருது (Golden Peacock Environment Management Award) வழங்கப்பட்டுள்ளது. 

கூ.தக.  : செயில் (SAIL) நிறுவனத்தின் தலைவர் - திரு அனில் குமார் சவுத்ரி.

👉இந்திய வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின்  கூட்டமைப்பின் (Associated Chambers of Commerce and Industry of India’s (Assocham))  இந்த நூற்றாண்டின் சிறந்த தொழில்முனைவோர்  விருது  ('ASSOCHAM Enterprise of the Century Award')  டாடா குழுமத்தின்  திரு. ரத்தன் டாட்டா அவர்களுக்கு பிரதமர் மோடி அவர்களால் 19-12-2020 அன்று  வழங்கப்பட்டது. 

👉 ஆசிய பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் (Asia Pacific Broadcasting Union (ABU)) துணைத் தலைவராக பிரசர் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வெம்பதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

👉”மேக்தூத் விருதுகள்” ( Meghdoot Awards) என்ற பெயரில்    அஞ்சல் துறை ஊழியர்களின் சிறந்த சேவைகளுக்கு வழங்கப்படும் விருது 15-12-2020 அன்று  வழங்கப்பட்டது. 

👉டாக் பே (DakPay)  செயலி : இந்திய தபால் துறை மற்றும் இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க்  ((India Post Payments Bank) இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு டாக் பே (DakPay) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. புதிய செயலியை 15.12.2020  அன்று அறிமுகம் செய்துள்ளன.

👉 நாடு முழுவதும் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காமதேனு இருக்கை அமைக்கத் திட்டமுள்ளதாக மத்தியக் கல்வி இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.

👉”ஐ.என்.எஸ். ஹிம்கிரி” (INS 'Himgiri') என்ற போர்க்கப்பல் 14.12.2020 அன்று நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது.  உள்நாட்டு தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பலை  கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (Kolkata's Garden Reach Shipbuilders and Engineers Limited (GRSE))  கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்துள்ளது. 

👉இ-சஞ்ஜீவனி தொலை தொடர்பு மருத்துவ சேவை, ஆலோசனை வழங்குவதில் 14.12.2020 அன்று 10 லட்சத்தை  கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

👉இந்தியாவில் பொது சுகாதாரக் கண்காணிப்பு பற்றிய  2035ம் ஆண்டுக்கான தொலைநோக்கை வெள்ளை அறிக்கையை (Vision 2035 Public Health Surveillance In India White Paper) நிதி ஆயோக்  15.12.2020 அன்று வெளியிட்டது.

👉23வது கைவினைப் பொருள்கள் கண்காட்சி உத்தரப்பிரதேசம் ராம்பூரில் டிசம்பர் 18-27  டிசம்பர்  2020 தினங்களில் நடைபெறுகிறது. 

👉ஐ.நா. வளர்ச்சி திட்டத்தினால் (United Nations Development Programme (UNDP))  வெளியிடப்பட்டுள்ள மனிதவள மேம்பாட்டு குறியீடு 2020 ல்  189 நாடுகளில்  இந்தியா 0.645 புள்ளிகளுடன் 131 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில், 2019 ஆம் ஆண்டில் இந்தியா 129 வது இடத்தில் இருந்தது.  

கூ.தக. : 2019 ஆம் ஆண்டில், இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் (Life expectancy)  69.7 வயது 

👉இமயமலை மலைப் பகுதியில் பிராந்திய காலநிலை மையத்தை இந்தியா நிறுவ உள்ளது. இந்த மையம் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் வானிலை தொடர்பான சேவைகளை வழங்கும். இதேபோன்ற மையத்தை சீனா தனது இமயமலையில் கட்டி வருகிறது.

👉பண்டித தீனதயாள் உபாத்யாய் தொலைத்தொடர்புத் திறன் மேம்பாட்டு விருதுகளில், முதல் பரிசு ‘சி மொபைல்' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கிய பெங்களூரைச் சேர்ந்த திரு ஸ்ரீனிவாஸ் கரணமுக்கும், இரண்டாம் பரிசு, ரயில் விபத்துகளிலிருந்து வனவிலங்குகளைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய புதுதில்லியைச் சேர்ந்த பேராசிரியர் சுப்ராத்  கர்ருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 


உலகம்

👉பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் (Bangabandhu Sheikh Mujib) பெயரில்  ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்திற்கான சர்வதேச விருதை யுனெஸ்கோ   அறிமுகப்படுத்த உள்ளது. 2021 யுனெஸ்கோவால் ‘நிலையான அபிவிருத்திக்கான ஆக்கபூர்வமான பொருளாதாரத்தின் சர்வதேச ஆண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூ.தக. : சேக் முஜிபுர் ரகுமான் கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர்.

👉 கானாவின் ஜனாதிபதி தேர்தலில்  நானா அகுபோ-அடோ (Nana Akufo-Addo) 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 

👉சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency (IEA)) தயாரித்த முதலாவது ‘மின்சார சந்தை அறிக்கை’ 2020 படி, தொற்றுநோய் காரணமாக உலகளாவிய மின்சார தேவை 2% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 உலகளாவிய நிதி நெருக்கடியின் காரணமாக 0.6% மின்சார தேவை வீழ்ச்சியை விட இந்த வீழ்ச்சி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  

👉2021 ஆண்டில்  ஐக்கிய நாடுகளவையின் முக்கிய அனுசரிப்புகள் 

சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கையின் ஆண்டு (International Year of Peace and Trust)  - 2021 

சர்வதேச நிலையான வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான பொருளாதாரத்தின் ஆண்டு (International Year of Creative Economy for Sustainable Development) - 2021 

சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஆண்டு (International Year of Fruits and Vegetables ) - 2021 

சர்வதேச  குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான ஆண்டு (International Year for the Elimination of Child Labour)

கூ.தக. :   ஐ.நா.  2020 ஆம் ஆண்டின் முக்கிய அனுசரிப்புகள் 

சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டு (International Year of Plant Health) - 2020

சர்வதேச செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் ஆண்டு (International Year of the Nurse and the Midwife) - 2020 


விருதுகள்

👉 ”இளம் சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் விருது 2020” ("Young Champions of the Earth" 2020 prize)  என்ற பெயரில் ஐ.நா.சுற்றுசூழல் திட்டம் அறிவித்துள்ள விருதுக்கு  இந்தியாவைச் சேர்ந்த வித்யூத் மோகன் ( Vidyut Mohan ) எனும் இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருதுக்கு உலகளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 7 நபர்களில் ஒருவரான இவர்,   "தகாச்சர்" (Takachar) என்ற சமூக தொழில்முனைவு (social enterprise) அமைப்பின் இணை நிறுவனர் ஆவார், இவ்வமைப்பானது,  விவசாயிகள் தங்கள் பண்ணை கழிவுகளை    எரிப்பதைத் தடுக்கவும், அவற்றை கூடுதல் மதிப்புடைய ரசாயனங்களாக மாற்றுவதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்டவும் உதவுகிறது.  

👉 ஐ.நா. சுற்றுசூழல் திட்டத்தின் ( United Nations Environment Programme (UNEP)) “சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் விருது 2020” (2020 Champions of the Earth)  பெற்றவர்கள் விவரம், வருமாறு, 

1.ஃபிராங்க்  பைனிமரமா (Frank Bainimarama), ஃபிஜி நாட்டின் பிரதமர் 

2. Dr.ஃபேபியன் லீண்டெர்ட்ஸ்  (Dr. Fabian Leendertz), ஜெர்மனி

3. மின்டி  லப்பர் (Mindy Lubber), அமெரிக்கா

4. நெமொண்டோநென்குமோ (Nemonte Nenquimo), ஈகுவடார்

5. யாகோபா ஷாவாடாகோ (Yacouba Sawadogo), பர்கினோ ஃபாஷோ (Burkina Faso)

6.  ராபர்ட் டி புல்லர்ட்   (Robert D. Bullard) , அமெரிக்கா 

👉 ஃபோர்ப்ஸ் 2020 அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் பிரபல அமெரிக்க ஊடக ஆளுமை மற்றும் அழகுசாதனப் பொருட்களின் நிறுவனர், கைலி ஜென்னர் முதலிடத்தைப் பிடித்தார். 2020 ஆம் ஆண்டில் 590 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.


வெளி நாட்டு உறவுகள்

👉 2 வது வங்காளதேச-இந்தியா பருத்தி விழா 2020 பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்றது. இதை பங்களாதேஷ் பருத்தி சங்கம் (Bangladesh Cotton Association (BCA)), பங்களாதேஷ் டெக்ஸ்டைல் மில்ஸ் அசோசியேஷன் (Bangladesh Textile Mills Association (BTMA)), இந்தியன் காட்டன் அசோசியேஷன் லிமிடெட் (Indian Cotton Association Ltd. (ICAL)), இந்தியா-பங்களாதேஷ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (India-Bangladesh Chamber of Commerce and Industry (IBCCI)) இணைந்து நடத்தின.

👉சினிமாஸ்கோப் (CinemaSCOpe) என்ற பெயரில்  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) நாடுகளுக்காக பிரத்தியேகமாக திரைப்படத் தொடரை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. இந்த முன்னெடுப்பின் மூலம், ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்ட இரண்டு டஜன் இந்திய திரைப்படங்களை மாதாந்திர அடிப்படையில் திரையிடப்படவுள்ளன. 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ‘மாநிலத் தலைவர்களின் கவுன்சில்’ (‘Council of Heads of State’) கூட்டத்தின் இந்தியாவின் தலைவர் பதவி காலம் வரை இது செய்யப்படும்.

👉இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிவிவகாரங்கள் துறை அமைச்சர் திரு டொமினிக் ராப், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் 16.12.2020 அன்று சந்தித்தார்.

👉 இந்தியாவும், அமெரிக்காவும், மின்சாரத்துறையில் இருதரப்பு நலன் குறித்த  தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

👉 பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் வங்காளத்தேச  நாட்டின் பிரதமர்   ஷேக் ஹசீனா இடையே  ஏழு  ஒப்பந்தங்கள் 17 டிசம்பர் 20 அன்று  நடைபெற்ற மெய்நிகர் உச்சி மாநாட்டில் கையெழுத்தாயின.

👉 இந்தியாவில் உள்ள ஹல்திபாரி  மற்றும் வங்கதேசத்தில் உள்ள சிலஹட்டி நகரங்களுக்கு (Haldibari-Chilahati Rail Link) இடையேயான ரயில் இணைப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு வங்கதேசப் பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து   18-12-2020 அன்று திறந்து வைத்தனர். இந்த இரயில் இணைப்பானது, இந்தியா - வங்காளதேச நாடுகளுக்கிடையேயான 5 வது இரயில் இணைப்பாகும், ஏற்கனவே இந்தியா - வங்காளதேச நாடுகளுக்கிடையே,  பெட்ராபோலே - பெனாபோலே (Petrapole – Benapole), கேடே -தர்ஷனா (Gede – Darshana), சிங்காபாத் - ரோகன்பூர் (Singhabad -Rohanpur), ராதிகாபூர் - பைரோல் (Radhikapur – Birol)  ஆகிய நான்கு இரயில் இணைப்புகள் காணப்படுகின்றன. 

👉 2021 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இங்கிலாந்து நடத்தும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைத்துள்ளார். தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்  மூன்று விருந்தினர் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

👉 சாலை உள்கட்டமைப்பு துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  9-12-2020 அன்று கையெழுத்தானது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

👉  ”பிளானட் ஒன்பது” (Planet Nine) / ”HD 106906 b” என்று  பெயரிடப்பட்டுள்ள , 336 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு எக்ஸோப்ளானட்டை, நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியின் தரவுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த கோளானது  நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோளாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் ஊகிக்கப்படுகிறது. 

👉 ”புராஜக்ட் லூன்” (Project Loon) :  கூகுள் (Google) நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது,  உலகின் தொலைதூர பகுதிகளுக்கு இணைய அணுகலை (internet access) வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது,  ஓராண்டு முழுவதும் இணையதள சேவை வழங்கி சோதனையில் வெற்றி கண்டுள்ளது.  இந்த  பலூன்கள் வழிமண்டலத்தின் ‘ஸ்டிராட்டோஸ்பியர்’ (stratosphere) அடுக்கில் நின்று , வான்வழி வயர்லெஸ் நெட்வொர்க்குகளை (aerial wireless networks.) உருவாக்கி, அதன் மூலம் இணைய சேவையை வழங்குகின்றன.

👉 ”CMS-01”  (முன்னாதாக GSAT-12R என அழைக்கப்பட்டது)  எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் 42 வது தகவல் தொடர்பு செயற்கைக் கோள்  PSLV-C50 ராக்கெட்டின் மூலம் ஸ்ரீகரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக 18-12-2020 அன்று விண்ணுக்கு செலுத்தப்பட்டது. 

👉  ”நேத்ரா” ('NETRA') என்ற பெயரில் பிரத்தியேக விண்வெளி நிலமை விழிப்புணர்வு  நடவடிக்கைகளுக்கான (Space Situational Awareness (SSA) activities) கட்டுப்பாட்டு மையத்தை பெங்களூரு நகரிலுள்ள ‘ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC)’ வளாகத்தில்,  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைத்துள்ளது. 

👉 மத்திய தொலைத் தொடர்பு துறையின் ஸ்பெக்ட்ரம்(அலைக்கற்றை) ஏலத் திட்டத்துக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 16-12-2020 அன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஏலத்தில் வெற்றி பெறும் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும். 700 , 800, 900 , 1800 , 2100 , 2300  மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை பேண்டில்  ஸ்பெக்ட்ரம் ஏலம் இருக்கும். 20 ஆண்டு காலத்துக்கு  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தம் 2251.25 மெகா ஹெர்ட்ஸ்  அலைவரிசை ரூ. 3,92,332.70 கோடி  மதிப்பில் வழங்கப்படுகிறது.

 👉 அணு ஆயுதத்தை தாங்க வல்ல   பிருத்வி -2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒடிஷாவின் பால்சோர் தளத்தில் 17-12-2020 அன்று வெற்றிகரமாக  சோதனை செய்யப்பட்டன. 

கூ.தக. : பிருத்வி -2 என்பது ஒரு  நிலத்திலிருந்து - நிலத்திலுள்ள இலக்கை தாக்கும்  குறுகிய-தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும் (Surface-to-Surface Short-Range Ballistic Missile (SRBM)))

👉  புதிய மின்முனைப் பொருளின் மூலம்  உயர் செயல் திறனுடன் கூடிய சிறப்பு மின்தேக்கியை (low-cost supercapacitor device) இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயல்படும் தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச முன்னேறிய ஆய்வு மையத்தின் (International Advanced Research Center for Powder Metallurgy and New Materials (ARCI)) விஞ்ஞானிகள் ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் ( IIT Hyderabad) இணைந்து  கண்டுபிடித்துள்ளனர்.

👉 சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை (GPS-Based Toll Collection) அரசு இறுதி செய்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை; சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.


சுற்றுச்சூழல்  

👉 ஐஎஸ்ஓ சான்றிதழ் 9001: 2015 (ISO 9001:2015 Quality Management Standards Certification)  பெற்றுள்ள முதல் இந்திய உயிரியல் பூங்கா எனும் பெருமையை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park)  பெற்றுள்ளது. 

👉 உலக சுகாதார அமைப்பின் (WHO)  உச்சி மாநாடு 2020 இல், 2020-2021 ஆம் ஆண்டில் உலகளவில் பெண்கள், குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க 2 பில்லியன் அமெரிக்க டாலர் உறுதி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. 

 

விளையாட்டு 

👉 அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் (Abu Dhabi Grand Prix.) 2020 கார் பந்தையப் போட்டியில்  டென்மார்க்கைச் சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) வெற்றி பெற்றுள்ளார். 

👉 6 வது சர்வதேச மெய்நிகர் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் (International Online Shooting Championship (IPSC)) 10 மீ ஏர் ரைபிள் போட்டியில்  இந்தியாவைச் சேர்ந்த யஷ் வர்தன் (Yash Vardhan)  தங்கம் வென்றுள்ளார். 

👉 துபாயில் நடைபெற்ற 23 வது அல் ஹப்தூர் சேலஞ்ச் (Al Habtoor challenge)  2020 இல் இந்திய டென்னிஸ் வீரர் அங்கிதா ரெய்னா மற்றும் ஜார்ஜியாவின் எகடெரின் கோர்கோட்ஜ் ஆகியோர் இரட்டையர் பட்டத்தை வென்றனர்.

👉 யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அரசு முறையாக அங்கீகரித்து இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 17.12.2020 அன்று அறிவித்துள்ளன.

👉 ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு,  1 மில்லியன் அமெரிக்க டாலர்  நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

👉 இந்தியாவின் அனுஷா மாலிக்  சொ்பிய தலைநகா் பெல்கிரேடில் நடைபெற்ற உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டி 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

👉 2030-ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பை கத்தாா் வென்ற நிலையில், 2034-ஆம் ஆண்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு சவூதி அரேபியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

👉 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்’ வரும் மாா்ச் 25-ஆம் தேதி ஜப்பானின் ஃபுகுஷிமாவில் தொடங்கி 100 நாள்கள் பயணித்து இலக்கை அடையவுள்ளது. இதில் 10,000 போ் இந்த ஜோதி ஓட்டத்தில் பங்கேற்று அதை ஏந்தவுள்ளனா்.

👉 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஃபிஃபா (Fédération Internationale de Football Association (FIFA)) ஆண்கள் வீரராக போலந்து  அணியின் கேப்டன் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (Robert Lewandowski)  மற்றும்  2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஃபிஃபா மகளிர் வீராங்கனையாக, இங்கிலாந்தின் லூசி பிரோன்ஸ்(Lucy Bronze)  ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 


முக்கிய தினங்கள் 

👉 சர்வதேச மலை தினம்  (International Mountain Day) - டிசம்பர் 11

👉 தேசிய எரிசக்தி பாதுகாப்பு  தினம் (National Energy Conservation Day)  - டிசம்பர் 14

👉 சர்வதேச தெயிலை தினம் (International Tea Day) -  டிசம்பர் 15 

கூ.தக. : 2005ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15 ஆம் தேதி சர்வதேச தேயிலை தினத்தை ஆண்டுதோறும் தேயிலை வளரும் நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகள் கொண்டாடுகின்றன. 

ஐ.நா.வின் சர்வதேச தேநீர் தினம் - மே 21  அன்று அனுசரிக்கப்படுகிறது. 

👉 விஜய் திவாஸ் (Vijay Diwas)  -  டிசம்பர் 16 

கூ.தக. : 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் வெற்றியைக்  குறிக்கும் நாளாக ’விஜய் திவாஸ்’ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 அன்று  கொண்டாடப்படுகிறது.  

👉 சர்வதேச அனைவருக்குமான சுகாதார தினம் (International Universal Health Coverage Day) - டிசம்பர் 12 

👉 பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான  சர்வதேச தினம் (International Day to End Violence Against Sex Workers)   -   டிசம்பர் 17

👉 சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day) டிசம்பர் 18.

கருப்பொருள்: மனித இயக்கத்தை மறுவடிவமைத்தல் (Reimagining Human Mobility)

👉 உலக அரபு மொழி தினம்  (World Arabic Language Day)  - டிசம்பர் 18

👉 சிறுபான்மையினர் உரிமை நாள்  (Minorities Rights Day) - டிசம்பர் 18


புத்தகங்கள் / ஆசிரியர்கள் 

👉 "விவசாயிகளை முதலிடத்தில் வைத்தல்"(Putting Farmers First) என்ற பெயரில் நூறு பக்க மின் புத்தகத்தை  இந்திய அரசு  வெளியிட்டுள்ளது. மூன்று விவசாய சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னர் ஒப்பந்த விவசாயத்தால் பயனடைந்த விவசாயிகளின் வெற்றிக் கதைகள் இந்த கையேட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.