தமிழகம்:
☞தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான “கரிகாற்சோழன் விருதுகள்” எரிமலை என்ற நூலை எழுதிய இலங்கையைச் சோ்ந்த தி. ஞானசேகரன், வானம் என்னும் போதிமரம் என்ற நூலை எழுதிய மலேசியாவைச் சோ்ந்த ஏ.எஸ். பிரான்சிஸ், மூங்கில் மனசு என்ற நூலை எழுதிய சிங்கப்பூரைச் சோ்ந்த அ. இன்பா ஆகிய எழுத்தாளா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூா் முஸ்தபா அறக்கட்டளை சாா்பாக, 2007- ஆம் ஆண்டு தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை நிறுவப்பட்டது.அந்த அறக்கட்டளையின் வாயிலாக, ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூா், மலேசியாவைச் சோ்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்காக ‘கரிகாற்சோழன் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியா:
☞“குழந்தைகளுக்கு நட்பான காவல் நிலையம் (Balsnehi (child-friendly)) மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையர் (National Commissioner for Protection of Child Rights (NCPCR)) வழங்கிய வழிகாட்டுதலின் படி அமைக்கபட்டுள்ள இந்த காவல் நிலையத்தின் நோக்கம் சிறார் குற்றங்களைத் தடுப்பதும், குழந்தைகள் சீர்திருத்தங்களை உறுதி செய்வதுமாகும்.
☞இந்தியாவில் முதல் முறையாக 100 ஆக்டேன் பெட்ரோலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த எரிபொருள் தயாரிக்கப்பட்டது. இந்த பெட்ரோலானது பொதுவாக அதிக செயல்திறன் தேவைப்படும் ரேஷ் வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஜெர்மனி, அமெரிக்கா, கிரீஸ், மலேசியா, இந்தோனேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஆறு நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.
☞இந்தியாவின் முதல் உடலுறுப்பு தான நினைவு சின்னம் (organ donor memorial ) இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : தேசிய உடலுறுப்பு தான தினம் (National Organ Donation Day) – நவம்பர் 27
☞இந்தியாவின் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அரசாங்கத் தலைவர்கள் கவுன்சிலின் 19 வது கூட்டத்தை இந்தியா நவம்பர் 30, 2020 அன்று மெய்நிகர் வழியாக நடத்தியது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ( SCO) பற்றி:
- எஸ்சிஓ என்பது இந்தியா , ரஷ்யா , சீனா , பாகிஸ்தான் , கஜகஸ்தான் , கிர்கிஸ்தான் , தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளின் பிராந்தியக் குழுவாகும். ஈரான் , ஆப்கானிஸ்தான் , பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நான்கு பார்வையாளர் நாடுகளும் இதில் உள்ளன
- பொதுச்செயலாளர் - விளாடிமிர் நோரோவ்
- தலைமையகம் - பெய்ஜிங் , சீனா
உலகம்:
☞கியூ . எஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2021 (QS Asia University Rankings 2021) ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்தது . இந்த பட்டியலில், ஐ.ஐ.டி- மும்பை (37) , ஐ.ஐ.டி-டெல்லி (47) மற்றும் ஐ.ஐ.டி-மெட்ராஸ் (50) ஆகியவை முதல் 50 இடங்களுக்கு வந்துள்ளன ஆனால் எந்த இந்திய பல்கலைக்கழகமும் முதல் -10 பட்டியலில் இடம் பெறவில்லை.
.
விளையாட்டு:
☞யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பிரான்ஸைச் சோ்ந்த ஸ்டெஃபானி ஃப்ராப்பாா்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
☞ ஒருநாள் போட்டிகளில் வேகமாக 12 ஆயிரம் ரன்களைச் சேர்த்த பேட்ஸ்மேன் என்கிற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரைவிடக் குறைவான ஆட்டங்களில் இந்தச் சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். மொத்தம் 242 இன்னிங்ஸில் (251 ஆட்டங்கள்) இந்தச் சாதனையை கோலி எட்டியுள்ளார். இது சச்சின் எடுத்துக்கொண்ட 300 இன்னிங்ஸ் என்கிற எண்ணிக்கையை விட 58 இன்னிங்ஸ் குறைவாகும்.
முக்கிய தினங்கள்:
☞தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் ( National Pollution Control Day ) - டிசம்பர் 2 (போபால் எரிவாயு நிகழ்வின் ( 2 டிசம்பர் 1984) உயிர் இழந்த மக்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.)
புத்தகங்கள்:
☞“சீக்கியர்கள் உடன் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் சிறப்பு உறவு”( PM Modi and His Government’s Special Relationship with Sikhs) என்ற புத்தகத்தை குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அவுட்ரீச் கம்யூனிகேஷன் பணியகம் வெளியிட்டுள்ளது.
super
பதிலளிநீக்கு