தமிழ்நாடு
👉அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விருது, இந்தஆண்டு முதல், ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.]
கூ.தக. : திரு சி.நாராயணசாமி நாயுடு அவர்கள் 1973-ம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்தவராவர்.
👉'தி க்ரே மேன்' (The Gray Man) என்கிற ஹாலிவுட் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பான இந்தப் படத்தை 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர்.
👉 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான "2020-க்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர்" விருது அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா
👉மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளான மின்சார (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020 (Electricity (Rights of Consumers) Rules, 2020) - ஐ முதன் முறையாக மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
👉ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவைகளுக்கான புதிய வழித்தடங்களை, மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம்அடையாளம் கண்டுள்ளது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாட்டின் 7,500 கி.மீ நீள கடலோர பகுதியில், படகு போக்குவரத்தை மேம்படுத்தும் முன்னணி திட்டம்தான் சாகர்மாலா.
உள்நாட்டில் ஹசிரா, ஒக்கா, சோம்நாத் கோயில், டையூ, பிபாவாவ், தாஹேஜ், மும்பை/ஜேஎன்பிடி, ஜாம்நகர், கொச்சி, கோக்ஹா, கோவா, முந்த்ரா மற்றும் மாண்ட்வி மற்றும் சோட்டாகிராம்(பங்களாதேஷ்), செசல்ஸ்(கிழக்கு ஆப்பிரிக்கா), மடகாஸ்கர்( கிழக்கு ஆப்பிரிக்கா), யாழ்ப்பாணம்(இலங்கை) ஆகிய 6 சர்வதேச வழித்தடங்களில், இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களில் இருந்து கப்பல் மற்றும் படகு சேவைகளை தொடங்க மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
👉 சுங்க (வர்த்தக ஒப்பந்தங்களின் கீழான நிர்வாக விதிகள்) விதிகள் 2020 ( Customs (Administration of Rules of Origin under Trade Agreements) Rules, 2020) 21 செப்டம்பர் 2020 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகள் தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளின் கீழ் இறக்குமதிகள் மீதான விகிதத்திற்கான “மூல விதிகளை” செயல்படுத்தும் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும்.
👉2020 மனித சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 111 வது இடத்திலுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 94 வது இடத்தைப் பெற்றிருந்தது. கேட்டோ நிறுவனம் மற்றும் ஃப்ரேசர் நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், முதல் மூன்று இடங்கள் முறையே நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் உள்ளன.
👉ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அமர் சிங் கல்லூரி (Amar Singh College, Srinagar) 2020 யுனெஸ்கோ (UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organization) கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புக்கான ஆசிய-பசிபிக் விருதுகளில் (Unesco Asia-Pacific Awards for Cultural Heritage Conservation) சிறப்புத் தகுதி விருது’(‘Award of Merit) பெற்றுள்ளது.
உலகம்
👉சீனா-பாகிஸ்தான் விமானப்படைகள் இணைந்து சிந்து மாகாணத்தில் ‘ஷாஹீன்’ என்ற கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு ள்ளன.
👉 அமெரிக்காவின் அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனது துணை செய்தித் தொடா்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வேதாந்த் படேலை தோ்ந்தெடுத்துள்ளாா்.
வெளிநாட்டு உறவுகள்
👉இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளிடையேயான 51-ஆவது எல்லை ஒருங்கிணைப்பு மாநாடு குவாஹாட்டியில் 22.12.2020 முதல் 27.12.2020 வரை நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு இருமுறை நிகழும் இந்த மாநாடு கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக தில்லிக்கு வெளியே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
👉 பிரதமர் திரு.நரேந்திரமோடி, வியட்னாம் நாட்டின் பிரதமர் திரு. குயேன் சுவான் புக் இடையிலான உச்சிமாநாடு, காணொலிக் காட்சி வாயிலாக 21-12-2020 அன்று நடைபெற்றது.
👉இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான மாநில செயலாளர் டொமினிக் ராப் (Dominic Raab), 14-17 டிசம்பர் 2020 தினங்களில் இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
👉இந்தியாவின் முதலாவது, மின் துறையில் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் , ஹரியானாவின் குவல் பஹாரி, குருகிராம் எனுமிடத்திலுள்ள தேசிய சூரிய ஆற்றல் நிறுவனம் (National Institute of Solar Energy (NISE)) வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
👉 உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020 (Global Technology Summit (GTS)) , “தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல்”( Geopolitics of Technology) எனும் மையக்கருத்துடன் 14-18 டிசம்பர் 2020 தினங்களில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதனை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)), கார்னகி இந்தியா (Carnegie India (CI)) ஆகியவை இணைந்து நடத்தின.
👉 20 வது இந்திய பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (Indian Ocean Rim Association (IORA)) அமைச்சர்கள் குழு (Council of Ministers (COM)) கூட்டம் 2020 ஐ காணொலிக் காட்சி வாயிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates (UAE)) நடத்தியது. பிரான்ஸ் நாடு, இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் 23 வது உறுப்பினராக இணைந்தது.
கூ.த.: 1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) தலைமையகம் மொரீஷியஸ் நாட்டிலுள்ள எபீன் எனுமிடத்தில் உள்ளது. இதன் தற்போதைய பொதுச்செயலராக நோம்வியோ என். நோக்வே(Nomvuyo N. Nokwe) உள்ளார்.
நியமனங்கள்
👉போர்க்கப்பல் தயாரிப்பு மற்றும் கொள்முதல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியாக, இந்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி 21.12.2020 அன்று பொறுப்பேற்றார்.
சுற்றுச்சூழல்
👉 நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன எனவும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிகபட்சமாக முறையே 3,421, 1,783 1,690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.
விளையாட்டுகள்
👉 ஜொ்மனியில் கொலோன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், பதக்கப் பட்டியலில் இந்தியா 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது. மகளிருக்கான 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜீத் கௌரும், 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌனும், அமித் பாங்கல் (52 கிலோ எடைப்பிரிவு). தங்கப் பதக்கம் வென்றனா். இந்தியா மொத்தமாக 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது. போட்டியை நடத்திய ஜொ்மனி 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. பிரான்ஸ் 3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது.
👉2021 ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் தற்காப்புக் கலைகளான ‘கட்கா’, ‘களரிப்பயட்டு’, ‘தங் டா’, ‘மல்லா்கம்பா’ ஆகியவற்றை சோ்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
👉“ஓ, மிசோரம்”( Oh, Mizoram) என்ற பெயரில், மிசோரத்தின் ஆளுநரான பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகத்தை துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டுள்ளார்.
👉 ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist' என்ற புத்தகத்தை, ஆசியா நியூஸ் இன்டர்நேஷனல் (Asia News International (ANI)) தலைவர் பிரேம் பிரகாஷ் எழுதியுள்ளார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.