-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 25-26 December 2020

தமிழ் நாடு

👉பண்பாட்டு ஆய்வாளரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான தொ.பரமசிவன் (70) 24.12.2020 அன்று காலமானார்.

கூ.த.: அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்), சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் உள்ளிட்ட நூல்களை தொ.பரமசிவன் எழுதியுள்ளார்.

இந்தியா 

👉ஜம்மு காஷ்மீருக்கான ஆயுஷ்மான் பிரதான் மந்திரி பாரத்  ஜெய் செஹத் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana SEHAT scheme for Jammu and Kashmir) திட்டத்தை 26-12-2020 அன்று காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம்.

அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.

👉“விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் (பொதுத்துறை) 2020”  என்ற பிரிவில்  விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (Air Force Sports Control Board (AFSCB))  இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு (FICCI) அறிவித்துள்ளது. 

👉சோ கார் சதுப்பு நிலம் (Tso Kar) இந்திய அரசு தனது 42-வது ராம்சார் தளமாகவும்(Ramsar site), லடாக் யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது ராம்சார் தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூ.தக. : ராம்சர் மாநாடு (Ramsar Convention) அல்லது “சதுப்பு நிலங்களுக்கான மாநாடு” (Convention on Wetlands) என்பது, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும்.  இந்த ஒப்பந்தமானது, 21 டிசம்பர் 1971ல் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது.   

👉நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் 1 ஜனவரி  2020  முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 

கூ.தக. : மத்திய மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-இன் படி 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல், வாகன உற்பத்தியாளர்கள் அல்லது முகவர்களால் விநியோகிக்கப்பட்ட பதிவு செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

👉பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவைச் சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கும் பயிற்சியை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.

👉'ஸ்வசதா அபியான்' (Swachhata Abhiyan) செல்போன் செயலி என்ற பெயரில், சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோர் குறித்து மக்கள் தகவல் அளித்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவும் வகையிலான மொபைல் செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் 24.12.2020 அன்று தொடங்கி வைத்தார். 

👉டைரக்ட் டு ஹோம் (Direct to Home (DTH)) ஒளிபரப்பு சேவைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சரவை   அங்கீகரித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் டி.டி.எச் இல் 100% அந்நிய நேரடி முதலீட்டை  அனுமதிக்கின்றன. மேலும், இது உரிம காலத்தை இருபது ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. உரிம காலமானது, முன்னதாக, அது பத்து ஆண்டுகளாக இருந்தது.

👉நிமோனியாவுக்கு எதிரான முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய தடுப்பூசியை  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India (SII)) உருவாக்கியுள்ளது. 

👉போடோ (Bodo) மொழியை அஸ்ஸாம் மாநிலத்தின் அலுவலக மொழியாக மாற்றும் மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

👉எல் அண்ட் டி டிஃபென்ஸ்(L&T Defence) எனப்படும் தனியார் பாதுகாப்பு உற்பத்தி மையம் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ‘பசுமை சேனல் அந்தஸ்தை’(green channel status) பெற்றுள்ளது.

👉கடலோர கண்காணிப்பு வலையமைப்பை (Coastal Surveillance Network (CSN)) விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவு, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் கடலோர ராடார் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 

👉திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண்ணான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த  ஆர்யா ராஜேந்திரன் (Arya Rajendran) பதவியேற்கவுள்ளார். இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.

👉இந்தியாவின் முதல் லித்தியம் சுத்திகரிப்பு நிலையம் குஜராத்தில் அமைக்கப்பட உள்ளது.  மணிகரன் பவர் லிமிடெட் எனும் நிறுவனம் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ரூ .1000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

👉ஐ.ஐ.டி. மெட்ராஸ் (Indian Institute of Technology(IIT))  ராஜஸ்தான் அரசின் சாலை பாதுகாப்பிற்கான தரவு சார்ந்த அமைப்புகள் அணுகுமுறைக்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

உலகம்

👉ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund(UNICEF)) ‘கோவிட் -19 தடுப்பூசி சந்தை டாஷ்போர்டை’ (‘COVID-19 Vaccine Market Dashboard) அறிமுகப்படுத்தியுள்ளது.  

 வெளியுறவு 

👉மிஷன் சாகர் III-இன் ஒரு பகுதியாக 2020 டிசம்பர் 24 அன்று இந்தியக் கடற்படைக் கப்பல் ஐ. என். எஸ். கில்தான்(INS Kiltan), வியட்நாம் நாட்டின் ஹோசிமின் ( Ho Chi Minh City) நகரத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது நட்பு நாடுகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மத்திய  வியட்நாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை இந்தக் கப்பலில் எடுத்துச் சென்றுள்ளது.

👉இந்தியாவும் இஸ்ரேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிசம்பர் 21, 2020 அன்று கையெழுத்திட்டன.

அறிவியல்  மற்றும் தொழில்நுட்பம்

👉”நயிக்லேரியா ஃபோவ்லேரி’  (Naegleria fowleri)  என்ற மூளை உண்ணும்  அமீபாவினால் ஏற்படும் நோய் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இது நன்னீர் நீச்சல் குளங்களின் மூலம் பரவி வருகிறது.  

👉கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின் அதனை தேசிய அளவில் முறையாக வழங்கும் நோக்கத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் இணைந்து பிரம்மாண்ட சவாலான கோவின் (COVID Vaccine Intelligence Network (CoWIN)) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளன.  

விளையாட்டுகள்

👉இந்திய  சாஃப்ட்பால் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவராக முதல் முறையாக நீத்தல் நரங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

👉2022-ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் விளையாடுவதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

👉சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (International Hockey Federation (FIH)) வெளியிட்டுள்ள தரவரிசைப 2020 படி, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி  4 வது இடத்திலும்,  பெண்கள் ஹாக்கி அணி 9 வது இடத்தில் உள்ளன.  இப்பட்டியலில், ஆண்கள் பிரிவில் பெல்ஜியத்தின் ஆண்கள் அணி  முதல் இடத்திலும், பெண்கள் பிரிவில் நெதர்லாந்து பெண்கள் அணி முதல் இடத்தையும் பிடித்துள்ளன. 

கூ.த.: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) தலைவர் - டாக்டர் நரிந்தர் துருவ் பாத்ரா,  தலைமையகம் - லொசேன், சுவிட்சர்லாந்து.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

👉“The Light of Asia: The Poem that Defined the Buddha” என்ற புத்தகத்தின் ஆசிரியர் -  ஜெய்ராம் ரமேஷ்  

👉‘Covid-19: Sabhyata ka Sankat aur Samadhan’ (Covid-19: Crisis of Civilisation and Solutions) என்ற புத்தகத்தின் ஆசிரியர் -  கைலாஷ் சத்யார்த்தி  (Kailash Satyarthi) 

முக்கிய தினங்கள்

👉தேசிய உழவர் தினம் (National Farmers' Day) - டிசம்பர் 23

👉தேசிய நுகர்வோர் தினம் ( National Consumer Day ) - டிசம்பர் 24 | மையக்கருத்து -   நிலையான நுகர்வோர் (The Sustainable Consumer’)

கூ.தக. : உலக நுகர்வோர் உரிமை தினம் (World Consumer Rights Day)  - மார்ச் 15

👉நல்லாட்சி தினம் (Good Governance Day) - டிசம்பர் 25 (முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது)

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.