தமிழ்நாடு
☞ இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் 2020 ல் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை மணிப்பூர் மாநிலத்திலுள்ள நாங்போக்சேக்மாய் (NongpokSekmai)காவல் நிலையம் பெற்றுள்ளது.
கூ.த.:2015 முதல் ஆண்டிற்கொரு முறை இந்த தரவரிசை மத்திய அரசினால் வெளியிடப்பட்டு வருகிறது.
☞ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் உள்ள உலக பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விருது : அமெரிக்காவில் உள்ள சர்வதேச தொழில்முறை பாதுகாப்பு சங்கமான உலக பாதுகாப்பு அமைப்பின் மூலம் பாதுகாப்பு தர நிலைகளை சிறப்பாக கடைபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனத்துக்கு சர்வதேச விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதில், ஆண்டுதோறும் 6 நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான விருதை இந்தியாவில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. முன்மாதிரியான பாதுகாப்பு தரங்களை உறுதி செய்தல்,பாதுகாப்பு பதிவுகளை திறம்பட பராமரித்தல், மக்கள், உடைமை, வளங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து பொறியாளர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துதல் உள்ளிட்டவை அடிப்படையில் இந்த விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா:
☞ ஜிஎஸ்டிவிலைப்பட்டியல் வெளியிடும் போது 49 ரசாயன அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான வரி விலைப்பட்டியலில் 8 இலக்க எச்எஸ்என் ((HSN -Harmonized System of Nomenclature code) குறியீட்டைக் குறிப்பிடுவதை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) கட்டாயமாக்கியுள்ளது.
☞ மஹாராஷ்டிராவில் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
☞ சமீபத்திய புயல்களின் பெயர்களைப் பரிந்துரைத்த நாடுகள்
- புரேவி புயல் - மாலத்தீவு
- நிவர் புயல் - ஈரான்
- நிசர்கா புயல் - வங்களாதேசம்
- அம்பான் புயல் - தாய்லாந்து
- ஃபானி புயல் - வங்களாதேசம்
☞ 10 வது தேசிய அறிவியல் திரைப்பட விழா 2020 24-27 நவம்பர் 2020 தினங்களில் இணையவழியில் நடைபெற்றது.
☞ ஆதி மஹோஸ்தவ் (Aadi Mahostav) தேசிய பழங்குடியினர் திருவிழா 1 டிசம்பர், 2020 அன்று நடைபெற்றது.
☞ ‘பாதுகாப்பு புவியியல்சார் தகவல் ஆராய்ச்சி நிறுவனம்’(Defence Geo Informatics Research Establishment) என்ற பெயரில் புதிய ஆராய்ச்சி நிறுவனத்தை, Snow and Avalanche Studies Establishment (SASE), மணலி, ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் Defence Terrain Research Laboratory (DTRL), புது தில்லி ஆகிய இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களை இணைப்பதன் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation - DRDO) உருவாக்கியுள்ளது.
☞ 9 வது சர்வதேச மணல் கலை விழா மற்றும் கோனார்க் நடன விழா ஒடிஷாவில் 1-5 டிசம்பர் 2020 தினங்களில் நடைபெறுகிறது.
☞ ஃபிட் இந்தியா இயக்கத்தின் (Fit India movement) தூதராககுல் தீப்ஹேண்டூ (Kuldeep Handoo) நியமிக்கப்படுகிறார்.
கூ.தக. : ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசத்திலிருந்து முதல் துரோணாச்சார்யா விருது பெற்ற குல்தீப்ஹேண்டூ வுஷு (Wushu) விளையாட்டு பயிற்சியாளராவர்.
உலகம்
☞ வாரணாசி அன்னபூர்ணா சிலை கனடாவிலிருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குக்கொண்டுவரப்படுகிறது.
கூ.த.: 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை 1913 ஆம் ஆண்டு திருடப்பட்டது. இந்த சிற்பம் ‘பெனாரஸ் பாணியில்’ செதுக்கப்பட்டுள்ளது
☞ "டைம்' இதழின் 2020 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தையாக (Time Kid of the Year) இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலிராவ் (15) (Gitanjali Rao) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
☞ உலகின் 8 வது மிகப்பெரிய பால் செயலாக்கியாக, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல்கூட்டமைப்பின் (Gujarat Cooperative Milk Marketing Federation (GCMMF)) பிராண்டான அமுல் (AMUL - Anand Milk Union Limited) உருவாகியுள்ளது. சர்வதேச பண்ணை ஒப்பீட்டு வலையமைப்பு (International Farm Comparison Network (IFCN)) வெளியிட்டுள்ள பால் செயலிகள் அறிக்கை 2020 ல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
☞ தெரேமின் ( theremin ) இசைக்கருவி உருவாக்கப்பட்டு 2020 இல் நூறு ஆண்டு நிறைவடைந்துள்ளது .
கூ.த.: உலகின் முதல் மின்னணுகருவியாகக் கருதப்படும் இதனை சோவியத் ரஷியாவைச் சேர்ந்த லியோன் தெரேமின் என்பவர் 1920 ஆண்டு உருவாக்கியுள்ளார்.
☞ 2019 ல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
☞ 6 வது பிரிக்ஸ் இளைஞர் உச்சி மாநாடு 2020 (BRICS Youth Summit) 30-11-2020 அன்று ரஷ்யாவின் உலியனோவ்ஸ்கில் (Ulyanovsk) “பிரிக்ஸ்: இளைஞர்களுக்கான இக்கால சவால்கள்” (BRICS: Challenges of the Time for young People) எனும் மையக்கருட்தில் நடைபெற்றது.
முக்கியதினங்கள்:
☞ தேசிய வழக்கறிஞர் தினம் (National Advocates Day) - டிசம்பர் 3
☞ சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - டிசம்பர் 3. | கருப்பொருள் 2020: மீண்டும் சிறப்பாக கட்டமைத்தல்: இயலாமை-உள்ளடக்கிய அணுகக்கூடிய மற்றும் நிலையான COVID-19 க்கு பின்னான உலகத்தை நோக்கி (Building Back Better: Towards a disability-inclusive accessible and sustainable post-COVID-19 World)
☞ உலக கணினி எழுத்தறிவு தினம் (World Computer Literacy Day) - டிசம்பர் 2.
☞ இந்திய கடற்படை தினம் (Indian Navy Day) - டிசம்பர் 4 (மையக்கருத்து 2020 - போருக்கு தயாரான, நம்பகமான மற்றும் ஒத்திசைவான இந்திய கடற்படை (Indian Navy Combat Ready, Credible and Cohesive)
☞ அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் (International Day for the Abolition of Slavery) - டிசம்பர் 2
புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்
☞ ”வஹானா மாஸ்டர் கிளாஸ்”(Vahana Masterclass) என்ற பெயரிலான தனது முதல் குழந்தைகள் புத்தகமான இத்தாலிய எழுத்தாளர் ஆல்ஃபிரடோகோவெல்லி (Alfredo Covelli) இந்தியாவில் வெளியிட்டார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.