-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 5-6 December 2020

தமிழ்நாடு 
 ☞ நாட்டிலேயே அதிகமான பெண் நீதிபதிகள் பணியில் உள்ள உயர்நீதிமன்றம் எனும் பெருமையை சென்னை உயர்நீதிமன்றம் பெற்றுள்ளது. இங்கு தற்போதைய மொத்த பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 .

 இந்தியா 

 ☞ ஆன்லைன் மற்றும் கற்பனை விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை வெளியிடும்போது, ‘இந்திய விளம்பர தர நிர்ணய குழு’ வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி, அனைத்து தனியார் டி.வி ஒலிபரப்பாளர்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிரப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 ☞ ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் விழா 2020 (India International Science Festival (IISF) 2020 ) 22-25 டிசம்பர் 2020 தினங்களில் இணையவழியில் நடைபெறுகிறது.   இதனை  அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுண்சில்  (Council of Scientific & Industrial Research – CSIR)  நடத்தவுள்ளது. 

 ☞ முன்னாள் பிரதமர் திரு ஐ கே குஜ்ரால் நினைவு சிறப்பு அஞ்சல் தலையை  குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு 04.12.2020 அன்று வெளியிட்டார்.

 ☞ அமெரிக்காவில் வசிக்கும் ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்களின் அமைப்பான ‘பான் ஐஐடி அமெரிக்கா (Pan  IIT USA)’ அமைப்பு ஏற்பாடு செய்த  ஐஐடி-2020 உலகளாவிய உச்சி மாநாட்டில் (IIT Global Summit)  04.12.2020 அன்று பிரதமர் சிறப்புரையாற்றினார்.

 ☞ லட்சத்தீவுகளின் தலைமை நிர்வாகி திரு தினேஷ்வர் ஷர்மா 04.12.2020 அன்று காலமானார்.

 ☞ இந்திய பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்சிஎல் தலைவர் ரோஷ்ணி நாடார் முதலிடத்தைப் பெற்றுள்ளார். கோடக் வெல்த் ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரப் பெண்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் கிரண் மஜும்தார் மற்றும்  3-ம் இடத்தில் லீனா காந்தி திவாரி ஆகியோர் உள்ளனர். 

 ☞ துணை ராணுவ ஊழியர் (வியூகம்)( Deputy Chief of Army staff (Strategy)) பதவியை உருவாக்க இந்திய அரசு 3-12-2020 அன்று, அனுமதி அளித்ததுள்ளது. அதன்படி, ஜெனரல் பரம்ஜித் சிங்(General Paramjit Singh) முதல் துணை ராணுவ ஊழியர் (வியூகம்) )( Deputy Chief of Army staff (Strategy))  ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

 ☞ வெளிநாடு வாழ் இந்தியர்கள்  (NRIs (Non-Resident Indians)) வாக்களிக்க ஏதுவாக அஞ்சல் வாக்குச்சீட்டைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் சமீபத்தில் முன்மொழிந்துள்ளது. இந்த முறையில்  மின்னணு முறையில் அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்கு முறையைப் (Electronically Transmitted Postal Ballot System - ETPBS) )பயன்படுத்த  தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

இந்திய விண்வெளி விஞ்ஞானி மற்றும் முன்னாள் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய (Vikram Sarabhai Space Centre VSSC)  இயக்குநர்  பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், 71 வயதில் காலமானார்.

வெளிநாட்டு உறவுகள்:

 ☞ இந்தியா மற்றும் ரஷியா நாடுகளின் கடற்படைகளின் கூட்டு கடற்படை ஒத்திகை ”Passage Exercise (PASSEX)”  4-5 டிசம்பர் 2020 தினங்களில் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நடைபெற்றது. 

கூ.த.:  ”Passage Exercise (PASSEX)” என்பது இந்தியா தந்து நட்பு நாடுகளுடன்  மேற்கொண்டு வரும் கூட்டு கடற்படை ஒத்திகையாகும். 

 ☞ ஆறாவது இந்தியா-சி.எல்.எம்.வி வணிக மாநாடு 2020 (6th virtual India-CLMV Business Conclave) இணையவழியில் 3-4 தினங்களில் நடைபெற்றது 

கூ.த.:

சி.எல்.எம்.வி(CLMV) நாடுகள் கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம்.

உலகம்:

 ☞ ஆசாத் பட்டன் திட்டம்(Azad Pattan project) என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜீலம் நதியில் கட்டப்பட உள்ள ஒரு நீர் மின் திட்டமாகும். 700 மெகாவாட் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த திட்டத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டாக மேற்கொள்ள உள்ளன.  

விருதுகள்

 ☞ சீரம் இன்ஸ்டிடியூட்டின் முதன்மை தலைமை அதிகாரி  ஆதார் பூனாவாலா , சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி நாளிதழ் ‘தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ மூலம் சிறந்த ஆசியராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 

சுற்றுச்சூழல் 

 ☞ மலையன் ராட்சதத அணில் அல்லது கருப்பு ராட்சத அணில்   (Malayan giant squirrel or the black giant squirrel (Ratufa bicolor)) என்ற உலகின் மிகப்பெரிய மர அணில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால்  அழிந்து போகக்கூடும் என்று இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India) சமீபத்தில் நடத்திய ஆய்வு  அறிக்கை தெரிவித்துள்ளது. 

கூ.த.:- மலாயன் அணில் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN: International Union for Conservation of Nature)  2016 ஆம் ஆண்டு பட்டியலில் “அச்சுறுத்தலுக்கு அருகாமையுள்ள”( Near Threatened)  விலங்காக பட்டியலிடப்பட்டுள்ளது.  இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் “பாதுகாக்கப்பட்டவை”( protected” under India Wildlife Protection Act) என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

 ☞ ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) வெளியிட்டுள்ள “உலகளாவிய காலநிலை 2020”( State of the Global Climate 2020) இடைக்கால அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான வெப்பநிலை தரவுகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பமான ஆண்டுகளில் மூன்றில் ஒன்றாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து 3 வது அதிக வெப்பமான ஆண்டாக மாறியுள்ளது. 

கூ.த.:-  23 மார்ச், 1950 அன்று  ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின் கீழ் ஓர் அங்கமாக தொடங்கப்பட்ட    உலக வானிலை அமைப்பின் (World Meteorological Organization) தலைமையிடம் ஜெனீவா (சுவிட்சர்லாந்து) நகரில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக  ஹெகார்ட் அட்ரியன்(Gerhard Adrian) உள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

 ☞ சாங்கி-5 விண்கலத்தின் பயணத்தின்போது நிலவில் 2 மீட்டா் அகலம், 90 செ.மீ. நீளம் கொண்ட தனது தேசியக் கொடியை சீனா ஏற்றியுள்ளது.

கூ.த.: அமெரிக்கா தனது தேசியக் கொடியை நிலவில் ஏற்றி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இரண்டாவது நாடாக சீனா இந்தப் பெருமையை பெற்றுள்ளது.

நியமனங்கள்

 ☞ இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்   தலைமை அதிகாரி ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா (Shrikant Madhav Vaidya) உலக திரவ பெட்ரோலியம் வாயு சங்கத்தின்(( World Liquefied Petroleum Gas Association(WLPGA))) முதல் துணை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூ.த.:- உலக எல்பிஜி சங்கத்தின் (World Liquefied Petroleum Gas Association) தலைமையகம் பாரிஸ் (பிரான்ஸ்) நகரில் உள்ளது. இதன் தற்போதைய தலைமை அதிகாரி க ஹென்றி கப்பன்(Henry Cubbon) உள்ளார். 

 முக்கிய தினங்கள்:

 ☞ உலக மண் தினம் (World Soil Day)  - டிசம்பர் 5 |  2020 ஆம் ஆண்டிற்கான மையக்கருத்தாக “மண்ணை உயிருடன் வைத்திருக்கவும், மண்ணின் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும்” (to keep soil alive, protect soil biodiversity)  என்பதை   ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (The Food and Agriculture Organisation of the United Nations) அறிவித்துள்ளது. 

 ☞ சர்வதேச தன்னார்வ தினம் (International Volunteer Day)  - டிசம்பர் 5 | மையக்கருத்து 2020 -  “ஒற்றுமையுடன் கூடிய தன்னார்வத் தொண்டு மூலம் முடியும்” ( together we can through volunteering)

 ☞ இந்திய கடற்படை தினம் - டிசம்பர் 4.

கூ.த.: 1971-ஆம் ஆண்டு, இந்திய-பாகிஸ்தான் போரின் போது, கராச்சி துறைமுகத்தில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது. இந்தத் தாக்குதல்  ”ஆப்பரேஷன் ட்ரைடென்ட்” என்று அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் -4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

 ☞  “அப்துல் கலாமுடன் 40 ஆண்டுகள் -சொல்லப்படாத கதைகள்” (’40 Years with Abdul Kalam- Untold Stories’)  என்ற புத்தகத்தை   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் (DRDO) முன்னாள் விஞ்ஞானி  சிவதாணு பிள்ளை எழுதியுள்ளார். 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.