-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 11-13 January 2021

TNPSC Current Affairs 11-13 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினருமான டி.எம்.காளியண்ண கவுண்டரின் 101 வது பிறந்த தினத்திற்கு ( 10.1.2021) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கஸ்தூரிபட்டி ஜமீன் குடும்பத்தைச் சோ்ந்த தாங்கள், விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி, சட்டமேதை டாக்டா் அம்பேத்கா், அண்ணல் காந்தியடிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கா்மவீரா் காமராஜா், மூதறிஞா் ராஜாஜி உள்ளிட்ட முதுபெருந்தலைவா்களுடன் பணியாற்றிய பெருமைக்குரிய இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வசித்து வருகிறார்.

அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இதன்படி இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது. எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்படவுள்ளன.

எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (70) 12-1-2021 அன்று காலமானார் . பள்ளி ஆசிரியராக இருந்த இவர் இடதுசாரி சிந்தனையாளர். வெண்மணிப் படுகொலையை முன்வைத்து இவர் எழுதிய 'செந்நெல்' நாவல் மிகவும் பாராட்டுப் பெற்றது. 1989 இல் இவர் எழுதிய தலைமுறைகள் என்னும் முதல் சிறுகதை, சாலை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றி வெளிவந்தது. இதுதவிர, உறங்க மறந்த கும்பகர்ணர்கள், ஒரே ஒரு ஊர்ல, நஞ்சை மனிதர்கள், தப்பாட்டம், பெருந்திணை, மரக்கால், தாண்டவபுரம், பால்கட்டு, எல்லை பிடாரி, வண்டல் உணவுகள் ஆகிய நாவல்களையும், மண் உருவங்கள், வண்டல், ஓராண்காணி, ஒரு ஊரும் சில மனிதர்களும், வட்டத்தை மீறி, மடையான்களும் சில காடைகளும், வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும், கப்பல்காரர் வீடு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

இந்தியா

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை செயல்படுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது . மறு உத்தரவு வரும் வரை இந்த இடைக்கால தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழு வையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இக்குழுவில், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு,

1) விவசாயிகள் சங்க தலைவர் புபீந்தர்சிங் மான்

2) இண்டர்நேஷனல் பாலிசி அமைப்பின் தலைவர் டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி

3) விவசாய பொருளாதார வல்லுநர் அசோக் குலாதி

4) மகாராஷ்டிரா சிவ்கேரி சங்கத்னாவின் அனில் தன்வாட்

டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் - பல்பிர் சிங் ரஜேவால்

ஆர்.எஸ். ஷர்மா குழு (RS Sharma Committee) : கோவிட்-19 (COVID-19) தடுப்பூசியை நிர்வகிப்பதற்கான 10 உறுப்பினர்கள் கொண்ட அதிகாரம் பெற்ற குழுவின் தலைவராக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவரான ஆர்.எஸ். ஷர்மாவை இந்திய அரசு நியமித்துள்ளது.

”சீ விஜில் -21 ” (Sea Vigil-21) என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையின் இரண்டாவது பதிப்பு 12-13 ஜனவரி 2021 தினங்களில் நடைபெறுகிறது.

கூ,தக. : முதலாவது ”சீ விஜில் ஒத்திகை” கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

’காதி பிரக்ரிதிக் பெயிண்ட்’ (Khadi Prakritik paint) என்ற பெயரில் நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப் பூச்சை, காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது. புத்தாக்க முறையில் தயாரிக்கப்பட்ட இந்த வண்ணப் பூச்சை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி 12-1-2021 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார். ‘‘காதி பிரகிரிதிக் வண்ணப் பூச்சு’’ என அழைக்கப்படும் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, நச்சுத் தன்மையற்றது. முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வண்ணப் பூச்சு, பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது. பசுஞ் சாணத்தை முக்கிய மூலப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை வண்ணப் பூச்சு, வாடை அற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.இதை ஜெய்ப்பூரில் உள்ள காதி ஆணையத்தின் குமரப்பா தேசிய கைவினை காகித மையம் மேம்படுத்தியுள்ளது. காதி பிரகிரிதிக் எமல்சன் வண்ண பூச்சு BIS 15489:2013 தரச்சான்றையும், காதி பிரகிரிதிக் டிஸ்டெம்பர் BIS 428:2013 தரச்சான்றையும் பெற்றுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yajana (PMFBY) ) வெற்றிகரமான 5 வருடங்களை நிறைவு செய்துள்ளது .

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறைவான, ஒரே மாதிரியான கட்டணத்தில் விரிவான காப்பீட்டுத் தீர்வை அளிக்கும் மைல்கல் நடவடிக்கையாக இந்தத் திட்டம் 2016 ஜனவரி 13 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

விவசாயிகளின் பங்குத் தொகைக்கு அதிகமான காப்பீட்டு கட்டணம் மாநில அரசாலும், மத்திய அரசாலும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 90 சதவீத கட்டண மானியத்தை ஏற்கிறது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் இருந்த சராசரி காப்பீட்டு தொகையான ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,100 என்பது, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டது.

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா (National Youth Parliament Festival) ,‘‘இளைஞர்கள் - புதிய இந்தியாவின் உற்சாகம்’’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 23 டிசம்பர் 2020 முதல் 12 ஜனவரி 2021 வரையில் நடைபெற்றது. ஓட்டுப்போடவும், அரசுப் பணியில் சேரவும் அனுமதிக்கப்படும் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட இளைஞர்களின் கருத்துக்களை கேட்பதே தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் நோக்கம். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடந்த மனிதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் தெரிவித்த யோசனைப்படி நடத்தப்படுவதும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் முதல் பதிப்பு ‘‘புதிய இந்தியாவின் குரலாக இருங்கள் மற்றும் தீர்வு காணுங்கள் மற்றும் கொள்கைக்கு பங்களிப்பை தாருங்கள்’’ என்ற கருப்பொருளில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 88,000 இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மட்டுமே தலா ரூ.200 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது . வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் இந்தியா நிறுவனம் கூறி உள்ளது.

கூ,தக, : மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள சீரம் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி - அடர் பூனாவாலா

தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர நலத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் தலைமையிலான பாரம்பரிய பாதுகாப்புக் குழு (Heritage Conservation Committee) ஒப்புதல் வழங்கியுள்ளது.

‘பிராரம்ப்’ என்ற பெயரரில் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஆவலுள்ளோருக்கான சா்வதேச மாநாடு 15-16 ஜனவரி 2021 தினங்களில் நடைபெறுகிறது.

முழுவதும் பெண் ஊழியா்களால் நீண்ட தூர விமானத்தை இயக்கி ஏா் இந்தியா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 9-1-2021 இரவு புறப்பட்ட இந்த விமானம் பெங்களூரு சா்வதேச விமானநிலையத்தில் 11-1-2021 அதிகாலை தரையிறங்கியது. அந்த விமானத்த்தை ஸோயா அகா்வால், பாபாகரி தன்மய், அகன்ஷா சோனாவரே, ஷிவானி மன்ஹாஸ் ஆகிய நான்கு பெண் விமானிகள் இயக்கினர்.

கரோனா தடுப்பூசி திட்டத்தை கண்காணிப்பதற்கு உதவும் கோ-வின் செயலி (Co-WIN app) , தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவற்கான அடித்தளமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

இந்தியா மற்றும் வங்கதேசத்தின் காவல்துறை தலைவர்கள் இடையேயான முதல் காணொலி பேச்சுவார்த்தை 12-1-2021 அன்று நடைபெற்றது.

பிரிட்டன் பிரதமர் வருகை ரத்தானதையடுத்து, இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த சுரிநாம் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

சர்வதேச நிகழ்வுகள்

அமெரிக்காவில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக மீண்டும் அறிவித்துள்ளது.

கூ.தக. : கியூபாவில் கடந்த 1959-ல் புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அதைத்தொடர்ந்து 1960-ல் அமெரிக்கா, கியூபா இடையிலான தூதரக உறவு முறிந்தது.

"ஒரே கோள் உச்சிமாநாடு 2021” (One Planet Summit ) 11-1-2021 அன்று ஐக்கிய நாடுகளவை, உலக வங்கி மற்றும் பிரான்ஸ் நாட்டினால் நடத்தப்பட்டது. ஒரே கோள் உச்சிமாநாடு என்பது சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் மனித ஆரோக்கியத்துடன் இணைப்புகளை உருவாக்குவதற்கும் கடமைகளைத் திரட்டுவதற்காக பல்லுயிர் பெருக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச நிகழ்வாகும்.

கூ.தக. : முதலாவது One Planet Summit 2017 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கும் நடவடிக்கையின் பின்னணியில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த 45 வயதான பெண் வழக்கறிஞர் விஜயா காட்டே இருந்துள்ளார்.

2021ம் ஆண்டின் சக்தி வாய்ந்த ஹென்லே பாஸ்போர்ட் குறியீடு வரிசையில் ஜப்பான் நாட்டுக்கான பாஸ்போர்ட் முதல் இடம் பிடித்து உள்ளது . 2வது இடத்தில் சிங்கப்பூர் (190 புள்ளிகள்) உள்ளது. 3வது இடத்தில் தென்கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகள் (189 புள்ளிகள்) பகிர்ந்து கொண்டுள்ளன. இவற்றில் 58 புள்ளிகளுடன் இந்தியா 85வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க நாட்டின் ராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் தொடா்பு அலுவலராக , திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்து வளா்ந்த தமிழா் ராஜ் அய்யா் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய-அமெரிக்க எழுத்தாளரான வேத் மேத்தா (86) காலமானார். ஒருங்கிணைந்த பஞ்சாபில் கடந்த 1934-ஆம் ஆண்டு பிறந்த வேத் மேத்தா, 3 வயதிலேயே கண்பாா்வையை இழந்தவராவர்.

பொருளாதாரம்

”சமூக பாதுகாப்புக்கான கோவிட் -19 நெருக்கடி எதிர்கொள்வதற்கான ஆதரவு கடன்” (Covid-19 Crisis Response Support Loan for Social Protection) என்ற பெயரில் , கோவிட் -19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சமூக உதவிகளை வழங்குவதில் இந்தியாவின் முயற்சிகளில் உதவுவதற்காக, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ரூ .2,113 கோடி கடன் ஒப்பந்தம் 8-1-2021 அன்று கையெழுத்தானது.

”சட்ட நிறுவன அடையாளங்காட்டி முறைமையை” (Legal Entity Identifier System) இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த முறைமையின் படி,

ஐம்பது கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நெஃப்ட் (NEFT (National Electronic Funds Transfer)) மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் (RTGS (Real Time Gross Settlement)) கட்டண பரிவர்த்தனைகளின் மீதும் சட்ட நிறுவன அடையாளங்காட்டி முறைமை அறிமுகப்படுத்தப்படுகிறது.

நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள சட்டப்பூர்வ நிறுவனங்களை அடையாளம் காண இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படுகிறது.

பணப்பரிமாற்றம் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007 (Payment and Settlement Systems Act, 2007) -ன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறைமையின் கீழ் இருபது இலக்க தனித்துவ எண் வழங்கப்படும். இந்த எண் செல்லத்தக்க கால அளவு ஒரு ஆண்டாகும்.

முதல் முறையாக ’சட்ட நிறுவன அடையாளங்காட்டி முறைமை’ கடந்த 2012 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து முதல்முறையாக வரும் பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முக்கிய தினங்கள்

உலக இந்தி மொழி தினம் (World Hindi day) - ஜனவரி 10

தேசிய இளைஞர் தினம் (National Youth Day) - ஜனவரி 12 (சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தில் (12 ஜனவரி 1863) அனுசரிக்கப்படுகிறது.)

அறிவியல் & தொழில்நுட்பம்

”யூப்ரந்தா சிறுவாணி” (‘Euphranta Siruvani’) என்ற பெயரில் புதிய வகை ’பழ ஈ’ (Fruit Fly) கோயம்பத்தூர் மாவட்டம் சிறுவாணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதி-உயர் இயக்க 2-டி எலக்ட்ரான் வாயுவை (ultra-high mobility 2d-electron gas (2DEG)) பஞ்சாப் மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் (Institute of Nano Science and Technology (INST), Mohali (Punjab)) உருவாக்கியுள்ளனர். இது குவாண்டம் தகவல்களின் பரிமாற்ற வேகத்தை அதிகரிக்க முடியும், குவாண்டம் சாதனங்களின் ஒரு பகுதியிலிருந்து மற்றொன்றுக்கு சிக்னல்களை வேகமாக அனுப்ப முடியும், தகவல் மற்றும் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

நாடு முழுவதும் (அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக், இஸ்ரோ ஆகியவை அறிவித்துள்ளன.

விளையாட்டுகள்

பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார் . பாகிஸ்தானுக்கு எதிராக 238 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். 919 புள்ளிகளுடன் அதிகப் புள்ளிகளை எடுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.பந்துவீச்சாளரில் அஸ்வின் 9-வது இடமும் பும்ரா 10-வது இடமும் பெற்றுள்ளார்கள்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

‘Gazing Eastwards: Of Buddhist Monks and Revolutionaries in China, 1957’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ரோமிலா தாபர் (Romila Thapar)

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.