-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 30-31 December 2020

 தமிழகம் 

☛ ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நடத்திவரும் இலக்கிய அமைப்பான 'கானல்', இணைய வழியில் நடத்திய, சிறார்கள் கதை சொல்லும் போட்டியில் பங்கேற்ற லோகானந்தஸ்ரீ (வயது 9),  பன்னாட்டு அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020-இல் மின் ஆளுகையில் சிறப்பாகப் பணியாற்றிய மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இந்தியா

சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை  திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  

கூ.தக. : 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31 அன்றுடன் முடிவடைந்தது.

உலகம் 

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின்(Global Alliance for Vaccines and Immunisation, GAVI) உறுப்பினராக(2021 - 2023) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஃபைவ் ஐஸ் நெட்வொர்க்(Five Eyes network) அமைப்பில்  ஆறாவது நாடாக ஜப்பான்  சேர்ந்துள்ளது.

கூ.தக. : 14 ஆகஸ்டு 1941 ல் தொடங்கப்பட்ட ஃபைவ் ஐஸ் நெட்வொர்க்(Five Eyes network) ஒரு  பன்னாட்டு உளவு அமைப்பாகும், துவக்கத்தில் ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியிருந்தது.

☛ சென்டர் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பிசினஸ் ரிசர்ச் லிமிடெட் (Centre for Economics & Business Research Ltd (CEBR)) வெளியிட்டுள்ள உலக பொருளாதார லீக் அட்டவணை 2021 (World Economic League Table 2021 (WELT)) இன் 12 வது பதிப்பின் படி, இந்தியா 2020 ஆம் ஆண்டில் 6 வது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது (193 நாடுகளில்). 2019 இல் 5 வது இடம் பிடித்தது. 2020 தரவரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, சீனா மற்றும் ஜப்பான் அடுத்த இடத்தில் உள்ளன.

வெளியுறவு 

மிஷன் சாகர் மூன்றாம் திட்டத்தின் கீழ், 2020, டிசம்பர் 29-ஆம் தேதி ஐஎன்எஸ் கில்தான் கப்பல் கம்போடியா நாட்டின் சிஹனவுக்வில்லே துறைமுகத்தை சென்றடைந்தது. அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு உதவியாக 15 டன் உணவுப் பொருட்கள் கம்போடியா நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் வழங்கபட்டது.

எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிக் குடியரசு ஆகிய மூன்று நாடுகளில் இந்திய தூதரகம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்  30.12.2020 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான விண்வெளியை அமைதியாகப் பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 19, 2020 அன்று  கையெழுத்தானது.

‘UMS மின்யே தேய்ங்காத்து’ (‘UMS Minye Theinkhathu’) என்று பெயரிடப்பட்டுள்ள , இந்தியாவினால் வழங்கப்பட்ட,  மியான்மர் நாட்டின் முதல் நீர்மூழ்கிப்பல் 25-12-2020 அன்று அந்நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

கூ.தக. :  இந்த நீர்மூழ்கிக் கப்பலானது 1988 ஆம் ஆண்டு முதல் ‘ஐ.என்.எஸ்.சிந்துவிர்’ ( ‘INS Sindhuvir’ ) என்ற பெயரில் இந்திய கடற்படையில் சேவையாற்றியது. அக்டோபர் 2020 ல் மியான்மர் நாட்டிற்கு வழங்கப்பட்டது.

அறிவியல் & தொழில்நுட்பம்

முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்தினீயம் 106 திசு மூலம் கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லடாக்கின் யூனியன் பிரதேச லே-இல் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் 29.12.2020 அன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

யோகன் வெய்க்சிங்33 (Yaogan Weixing-33) எனும் சீனாவின் தொலையுணா்வு செயற்கைக்கோள்   லாங் மாா்ச்-4சி (Long March 4C) ராக்கெட்டின் மூலம்  27-12-2020 அன்று விண்ணில் ஏவப்பட்டது.

☛ லுகோடெர்மா(leucoderma) சிகிச்சைக்கான ‘லுகோஸ்கின்’(Lukoskin) மருந்தை உள்ளடக்கிய மூலிகை மருந்துகளை வளர்ப்பதில் டாக்டர் ஹேமந்த்குமார் பாண்டேவுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research & Development Organization (DRDO)) ‘ஆண்டின் சிறந்த விஞ்ஞானி விருது -2018’ ஐ வழங்கியுள்ளது.

ஆகாஷ் ஏவுகணையின் ஏற்றுமதிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 

கூ.த.: தரையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவு வரை வானத்தில் சென்று தாக்கும் இந்த ஏவுகணை கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையிலும், 2015-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டது.

“WHO COVID-19 செயலி”( WHO COVID-19 app) என்ற மொபைல் செயலியை  உலக சுகாதார நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

”குளோபல் பிரவாசி ரிஷ்டா போர்ட்டல்” மற்றும் மொபைல் செயலியை (Global Pravasi Rishta Portal and Mobile app) இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் பயன்பாடு உலகம் முழுவதும் பரவியுள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல்

இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹால்ட்வானியில் டிசம்பர் 29, 2020 அன்று பட்டாம்பூச்சி நிபுணர் பீட்டர் ஸ்மெடசெக்(Peter Smetacek) அவர்களால் திறக்கப்பட்டது.

விருதுகள்

சமூகநீதிக்கன அன்னை தெரசா நினைவு விருது 2020 (Mother Teresa Memorial Awards for Social Justice)   ஹார்மனி அறக்கட்டளையால் (Harmony Foundation) அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றோர் விவரம் வருமாறு, 

டாக்டர்.ஆண்டணி பவுசி (Dr Anthony Fauci), அமெரிக்கா

ஃபாதர் ஃபேபியோ ஸ்டெவெனாசி (Fr Fabio Stevenazzi) , இத்தாலி 

டாக்டர். பிரதீப் குமார்  (Dr Pradeep Kumar), சென்னை 

கிறிஸ்டியன் ஃபிராகாசி மற்றும் அலெசாண்ட்ரோ ரோமையோலி (Cristian Fracassi and Alessandro Romaioli ), இத்தாலி

விகாஷ் கன்னா (Vikas Khanna), அமெரிக்கா

கே.கே.சைலஜா (KK Shailaja), கேரள அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் 

‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருதை ரயில்வே வாரியத் தலைவர் திரு.வி.கே.யாதவுக்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம்(Institution of Engineering and Technology (IET)) வழங்கியுள்ளது. 

கூ.த.: பாரத ரத்னா சர். எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் பொறியாளர்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி தில்லியில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம்(Institution of Engineering and Technology (IET)) கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு சிறந்த பொறியாளர் விருது  வழங்கப்படுகிறது.

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council(ICC)) தசாப்தத்தின் விருதுகள் (Awards of the Decade(2010-2020)) வென்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐ.சி.சி ஆண்களின் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதையும், ஐ.சி.சி ஆண் கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதையும் (Sir Garfield Sobers Award) வென்றார். .

புத்தகங்கள்

Atal Bihari Vajpayee in Parliament – A Commemorative Volume எனும் புத்தகத்தை, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில்  மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

 முக்கியதினங்கள்

முதலாவது, சர்வதேச தொற்றுநோய் தயாராயிருத்தல் (International Day of Epidemic Preparedness) தினம் ஐக்கிய நாடுகள் சபையால் 27 டிசம்பர் 2020  அன்று அனுசரிக்கப்பட்டது. 

1 கருத்து உள்ளது

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.