-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 9-10 January 2021

TNPSC Current Affairs 9-10 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

புனரமைக்கப்பட்ட 8 வரலாற்று சின்னங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9-1-2021 அன்று திறந்துவைத்தார். ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையின் மூலம் மொத்தம் 12 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு,

கட்டபொம்மன் கோட்டை - தூத்துக்குடி மாவட்டம்

மனோரா நினைவு சின்னம் - தஞ்சாவூர் மாவட்டம்

டச்சுக் கல்லறை - நாகப்பட்டினம் மாவட்டம்

திருமலை நாயக்கர் அரண்மனை - மதுரை மாவட்டம்

மருதுபாண்டியர் கோட்டை - சிவகங்கை மாவட்டம்

தியாகதுருகம் மலைக்கோட்டை - கள்ளக்குறிச்சி மாவட்டம்

உதயகிரி கோட்டை - கன்னியாகுமரி மாவட்டம்

சின்னையன்குளம் - -திருவண்ணாமலை மாவட்டம்

பூண்டி அருகர் கோவில் -திருவண்ணாமலை மாவட்டம்

தடாகபுரீஸ்வரர் கோவில் - -திருவண்ணாமலை மாவட்டம்

கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் - திருவண்ணாமலை மாவட்டம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்களால், மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா

”சாகர் அனிவேஷிக்கா” என்ற பெயரிலான, பிரதமரின் சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள , காலநிலை மாற்றம், கடல் நீரோட்டம் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான கடலோர ஆராய்ச்சி கப்பலை சென்னை துறைமுகத்தில் நடந்த விழாவில் மத்திய மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் 9-1-2021 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கூ.தக. : பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் கீழ் ஆழ்கடலில் தண்ணீருக்கு அடியில் ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2019-ம் ஆண்டு சாகர் தாரா என்ற கப்பல் ஆராய்ச்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.

காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி 9-1-2021 அன்று காலமானார் . இவர் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

தமிழ் அகாதெமியைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை 7-1-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் 8-1-2021 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர் .

தொ்மோமீட்டா், ரத்த சா்க்கரை அளவைக் கணக்கிடும் குளுக்கோமீட்டா், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் கருவி உள்பட 4 வகையான மருத்துவ உபகரணங்களை மருந்துகளின் வரையறைப் பட்டியலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த 1-1-2021 முதல் அந்த புதிய நடைமுறை அமலாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம்15 ஆண்டுகள் சிறை த் தண்டனை விதித்து உள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுண்சிலின் பின்வரும் மூன்று குழுக்களுக்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளது.

1. தீவிரவாதத்திற்கெதிரான குழு (Counter-Terrorism Committee)

2. லிபியா பொருளாதாரத் தடைகள் மீதான குழு (Libya Sanctions Committee)

3. தலிபான் பொருளாதாரத் தடைகள் மீதான குழு (Taliban Sanctions Committee)

ஐக்கிய நாடுகளவையின் பாதுகாப்பு கவுண்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக எட்டாவது முறையாக 4 ஜனவரி 2021 அன்று இந்தியா தனது பதவி காலத்தை (2021-2022) தொடங்கியது . மெக்ஸிகோ, கென்யா, நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இந்தியாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

இந்தோனேசியாவைச் சோ்ந்த , ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 62 பேருடன் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது .

கூ.தக. : கடந்த 2018-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் லயன் ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் ஜகாா்த்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிஷங்களில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்திலிருந்த 189 பேரும் பலியாகினா்.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அந்நாட்டு அரசினால் இடிக்கப்பட்டு தரைமட்டமாகி உள்ளது . இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூறும் வகையில் 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தது.

அமெரிக்க துணை அதிபராகத் தோ்வாகியுள்ள கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளா் பொறுப்புக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

உலகின் முன்னணி பணக்கார்கள் பட்டியலில் முதலிடத்தை, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் தலைவரான எலான் மஸ்க் (1885 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு) பெற்றுள்ளார் . எலான் மஸ்கைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் 1870 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 2ஆம் இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் 1320 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

தெற்காசிய கரோனா மற்றும் வறுமை ஒழிப்பு ஒத்துழைப்பு மாநாடு பெய்ஜிங்கில் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. சீனா நடத்திய இந்த மாநாட்டில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்று, கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடா்பாக ஆலோசனை நடத்தின.

மாடா்னா நிறுவன தடுப்பூசிக்கு, பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது . ஏற்கெனவே ஃபைஸா்-பயோஎன்டெக், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளதால், கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பைப் புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படவுள்ளார்.

”ஃபாதா-1” (‘Fatah-1’) என்ற பெயரில் பலமுறைப் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை பாகிஸ்தான் 7-1-2021 அன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது.

முக்கிய தினங்கள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை அனுசரிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஓர் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கி ஒரு வருடம் வரை நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து இந்த குழு முடிவு செய்யும்.

கூ.தக. : நேதாஜி பிறந்த தினம் - 23 ஜனவரி, 1897

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas) - ஜனவரி 9 | மையக்கருத்து(2021) - சுயசார்பு இந்தியாவிற்காக ஒத்துழைத்தல் (Contributing to Atma Nirbhar Bharat)

அறிவியல் & தொழில்நுட்பம்

IRINN - Indian Registry for Internet Names and Numbers

☞ NIXI - National Internet Exchange of India

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.