TNPSC Current Affairs 27-30 ஏப்ரல் 2021
தமிழ்நாடு
☞ ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கருங்கலக்குறிச்சியில் 2,000 ஆண்டுகள் பழைமையான சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள் , கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன .கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு ஊர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது.
☞ தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அ.இ.அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த அரங்கநாயகம் 29-4-21 அன்று காலமானார்.
☞ கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகைப் பகுதியில் கிடைத்த 2600 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளிலிருந்து குறியீடுகளுடன் கூடிய பானைகள் கண்டெடுக்கப்பட்டன . இதில் சிறிய வடிவிலான பானைகளில் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்படுகின்றன. இது உணவுப் பாத்திரம் அல்லது குவளையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 19 செ.மீ. விட்டமுள்ள ஒரு உணவுப் பாத்திரத்தின் உயரம் 4.5 செ. மீட்டர் உள்ளது. மற்றொரு பாத்திரம் 14 செ.மீ. விட்டமும், 16 செ.மீ. உயரமும் உள்ளது. மற்றொரு பாத்திரம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
☞ ஸ்டெர்லைட் ஆலையில் வரும் 31 ஜூலை 2021 வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும் , ஆக்ஸிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும், அதன் பிறகு, அப்போதைய சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் மறுஆய்வு செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
☞ சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ் ( 87), உடல் நலக் குறைவால் புதுச்சேரியில் காலமானார். ஒடிஸா மாநிலம், பாலாசூர் மாவட்டம், சங்கரி என்ற பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 1963 முதல் புதுச்சேரியில் வசித்து வந்தார். ஒரியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளரான இவர், நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். "மிஸ்ட்ரி ஆஃப் மிஸ்ஸிங் கேப் அண்டு அதர்ஸ் ஸ்டோரிஸ்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக, கடந்த 1972-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இந்தியா
☞ அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மலேரியாவை குணப்படுத்துவதற்கான ‘ஆயுஷ்- 64’ மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
கூ.தக. : கடந்த 1980-ம் ஆண்டு, மலேரியாவை குணப்படுத்துவதற்கு என ‘ஆயுஷ்-64’ என்ற மருந்து உருவாக்கப்பட்டது.
☞ கடந்த 2020- ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா 3- வது இடத்தில் உள்ளது . ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து செயல்படும் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.
இதர தகவல்கள் :
உலக நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ செலவில் அமெரிக்காவின் பங்கு 39 சதவீதமாக உள்ளது. இதையடுத்து சீனாவின் பங்கு 13 சதவீதமாகவும் இந்தியாவின் பங்கு 3.7 சதவீதமாகவும் உள்ளது.
அமெரிக்கா தனது ராணுவத்துக்கு கடந்த 2020-ல் 77,800 கோடிடாலர் செலவிட்டுள்ளது. சீனா25,200 கோடி டாலரும் இந்தியா7,290 கோடி டாலரும் செலவிட்டுள்ளன.
2011 முதல் 2020 வரை அமெரிக்க ராணுவ செலவு 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் சீனாவின் ராணுவ செலவு 76 சதவீதமும் இந்தியாவின் ராணுவ செலவு 34 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
உலகில் ராணுவத்துக்கு அதிகம்செலவிட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
☞ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்த பிரகாஷ் ஷா( 64) ஜைன துறவியாக மாறியுள்ளார். இவருடன் இவரது மனைவி நைனா ஷாவும் துறவறம் பூண்டுள்ளார்.ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் ரூ.75 கோடியாகும்.
☞ மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 600- ல் இருந்து ரூ. 400 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூ.தக. : கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
☞ கோவிஷீல்டு தடுப்பூசியின் மாநிலங்களுக்கான விலையை ரூ.400-இல் இருந்து ரூ.300-ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.
கூ.தக. : பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
☞ பி.எம். கோ்ஸ் நிதியிலிருந்து, எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலான ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்களை கொள்முதல் செய்யவும், புதிதாக 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது .
☞ இந்தியாவில் ’கோவிசீல்டு தடுப்பூசியைத்’ தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவல்லாவிற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
☞ இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் (பி. 1.617) 17 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
☞ பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அமைப்பு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் , அந்த அமைப்பை தேசிய அளவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
☞ ’ சாண்ட்லர் நல்லாட்சி குறியீடு 2021’ (Chandler Good Government Index 2021) - ல் இந்தியா 49 வது இடத்தைப் பெற்றுள்ளது . முதல் மூன்று இடங்களை முறையே பின்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகள் பெற்றுள்ளன.
☞ இந்தியாவில் கோவிட்- 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ. 135 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாக கூகுள் ( Google) நிறுவனம் அறிவித்துள்ளது.
☞ “ நோவாடாக்- R” (Nodavac-R) என்ற பெயரில் ’ Viral Nervous Necrosis’ நோய்க்கெதிராக , இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மீன்களுக்கான தடுப்பூசியை சென்னையிலுள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (ICAR - Central Institute of Brackishwater Aquaculture) உருவாக்கியுள்ளது.
கூ.தக. : Viral Nervous Necrosis நோயானது பெடானோடாவைரஸினால் (Betanodaviru) உருவாகிறது.
☞ இந்தியாவின் முதலாவது 3- டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட வீட்டை (3D printed house) ஐ.ஐ.டி.மெட்ராஸில் (IIT Madras) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் 28-4-2021 அன்று திறந்து வைத்தார்.
☞ ‘ பைத்தான்- 5’ (Python 5) ஏவுகணை சோதனை : முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் வானிலிருந்தபடி வான் இலக்கை துல்லியமாகத் (Air to Air) தாக்கி அழிக்கும் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான ‘பைத்தான்-5’ ஏவுகணையை ஏந்திச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : ‘பைத்தான்’ (Python) ஏவுகணையானது இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட வானிலிருந்து வான் இலக்கை தாக்கக்கூடிய ஏவுணையாகும். இவை 37 கி.மீ. வரையிலான தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்லது.
☞ ’ லடாக் இக்னைட்டட் மைண்ட்ஸ் திட்டம்’ ( Ladakh Ignited Minds project) என்ற பெயரில் லடாக் யூனியன் பிரதேச மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை இந்திய இராணுவம் தொடங்கியுள்ளது. லடாக் மாணவர்களை JEE , NEET போன்ற உயர்க்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, இந்திய இராணுவம் ‘இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட்’ (Hindustan Petroleum Corporation Limited) மற்றும் பூனேவைச் சேர்ந்த ‘National Integrity and Educational Development Organisation’ எனும் தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
☞ கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது.
☞ இந்தியா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே ‘வினியோகச் சங்கிலி நெகிழ்திறன் முன்னெடுப்பு’( Supply Chain Resilience Initiative (SCRI)) 27-4-2021 அன்று தொடங்கப்பட்டுள்ளது . இதன் மூலம் இம்மூன்று நாடுகளும் இந்தியா - பசுபிக் பகுதிகளில் வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் ஈடுபட முடியும்.
☞ ” நீல இயற்கை கூட்டமைப்பு” (‘ Blue Nature Alliance’) என்ற பெயரில் 18 மில்லியன் கிலோ மீட்டர் கடல் பகுதிகளை (உலகிலுள்ள 5% கடற்பகுதி) பாதுகாப்பதற்கான உலகளாவிய கடல் கூட்டமைப்பை ’Blue Nature Alliance’ , Conservation International, The Pew Charitable Trusts, the Global Environment Facility, Minderoo Foundation மற்றும் Rob and Melani Walton Foundation ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொடங்கியுள்ளன.
☞ சுங்க ஒத்துழைப்பு மற்றும் சுங்கத்துறை விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவியை மேற்கொள்ள இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுங்க குற்றங்கள் தடுப்பு மற்றும் விசாரணைக்கும், நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் வர்த்தக பொருட்களுக்கான அனுமதியை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
☞ "DANTAK" திட்டம் ( Project DANTAK) : இந்திய அரசின் உதவியுடன் பூட்டான் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் "DANTAK" என்ற பெயரிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் அதன் வைர விழாவை 21-4-2021 அன்று எட்டியது. இந்த திட்டமானது, ஏப்ரல் 24, 1961 அன்று அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர் லால் நேருவினால் தொடங்கப்பட்டது.
சர்வதேச நிகழ்வுகள்
☞ " டிஃபெண்டர் - யூரோப் 21” (DEFENDER-Europe 21) என்ற பெயரில் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organisation) பன்னாட்டு கூட்டு இராணுவ ஒத்திகை அல்பேனியா நாட்டில் நடைபெற்றது.
☞ அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற முதல் கூட்டுக் கூட்டத்தின் அவைத் தலைவா்கள் இருக்கைகளில் அமா்ந்து , துணை அதிபரும் நாடாளுமன்ற மேலவையான செனட் சபைத் தலைவருமான கமலா ஹாரிஸ் மற்றும் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி சாதனை படைத்தனா். அந்த நாட்டு வரலாற்றில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபா் உரையின்போது அவருக்குப் பின் உள்ள இருக்கைகள் இரண்டிலும் பெண்கள் அமா்ந்தது இதுவே முதல்முறையாகும்.
கூ.தக. : அமெரிக்காவின் முதல் பெண், மற்றும் கருப்பினத்தைச் சோ்ந்த துணை அதிபரான கமலா ஹாரிஸுடன், கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசியும் பங்கேற்றாா். கடந்த 2007-ஆம் ஆண்டில் கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவா் பொறுப்பை ஏற்ற முதல் பெண் பெலோசி என்பது குறிப்பிடத்தக்கது.
☞ 72-வது சர்வதேச விண்வெளி மாநாடு துபாய் உலக வர்த்தக மையத்தில் வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.
☞ அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
☞ தானியங்கி வாகனங்களை சாலைகளில் இயக்குவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ள உலகின் முதல் நாடு எனும் பெருமையை இங்கிலாந்து நாடு பெற்றுள்ளது.
☞ உலக சுகாதார அமைப்பின் E-2025 முன்னெடுப்பு (” E-2025 initiative”) : 2025 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிக்கும் திறனுடைய இருபத்தைந்து நாடுகளை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளது. இது ' E-2025 முன்னெடுப்பு’ என்று அழைக்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட 25 நாடுகள் மலேரியா மற்றும் கோவிட் -19 ஆகியவற்றின் இரட்டை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் சிறப்பு ஆதரவையும் வழங்கும்.
☞ ’ டிராக்கோமா’ ( Trachoma) நோயினை முற்றிலும் ஒழித்துள்ள இரண்டாவது ஆப்பிரிக்க நாடு எனும் பெருமையை காம் பியா நாடு (Gambia) பெற்றுள்ளது. பார்வைக் குறைபாட்டிற்கு காரணமான டிராக்கோமா நோயினை முழுவதுமாக ஒழித்த முதல் நாடு கானா ஆகும்.
பொருளாதாரம்
☞ நிதி அமைப்புகளை பசுமைமயமாக்குவதற்கான மத்திய வங்கிகளின் நெட்வர்க்கில் ( Central Banks and Supervisors’ Network for Greening the Financial System (NGFS)) இந்திய ரிசர்வ் வங்கி 23-4-2021 அன்று உறுப்பினராக இணைந்துள்ளது. இந்த அமைப்பானது ’பாரிஸ் ஒரே கோள் உச்சிமாநாட்டின்’ (Paris One Planet Summit) போது 12-12-2017 அன்று தொடங்கப்பட்டதாகும்.
☞ கோவிட்- 19 பரவலைக் கையாள்வதற்காக , இந்தியாவிற்கு , ஏப்ரல் 2021 வரையில் , 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் ( 1.11 இல ட் சம் ரூபாய்) கடனுதவியை வழங்கியுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank(ADB)) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விருதுகள்
☞ ஆஸ்கர் விருதுப் பட்டியல் 2021 ( நன்றி:தினமணி)
சிறந்த திரைப்படம் - நோமேட்லேண்ட்
சிறந்த அந்நியமொழித் திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க் நாட்டுத் திரைப்படம்)
சிறந்த இயக்குநர் - சூலோ ஜாவோ (நோமேட்லேண்ட்)
சிறந்த நடிகர் - அந்தோணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)
சிறந்த நடிகை - ஃபிரான்சிஸ் மெக்டோர்மண்ட் (நோமேட்லேண்ட்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சோல்
சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்
சிறந்த குறும்படம் - டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்
சிறந்த ஆவணக் குறும்படம் - கொலேட்டி
சிறந்த அசல் திரைக்கதை - எமரால்ட் ஃபென்னெல் (பிராமிசிங் யங் வுமன்)
சிறந்த தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் ஹேம்டன், பிளோரியன் ஜெல்லர் (தி ஃபாதர்)
சிறந்த பின்னணி இசை - சோல்
சிறந்த பாடல் - ஃபைட் ஃபார் யூ (ஜுதாஸ் அண்ட் தி பிளாக் மெûஸயா)
சிறந்த ஒளிப்பதிவு - மேங்க்
சிறந்த படத்தொகுப்பு - சவுண்ட் ஆஃப் மெடல்
சிறந்த கலை வடிவமைப்பு - மேங்க்
சிறந்த குணச்சித்திர நடிகர் - டேனியல் கலூயா (ஜுதாஸ் அண்ட் தி பிளாக் மெûஸயா)
சிறந்த குணச்சித்திர நடிகை - யு ஜங் யூன் (மினாரி)
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
சிறந்த விஷுவல் எஃபெக்ட் - டெனெட்
சிறந்த ஒலித்தொகுப்பு - சவுண்ட் ஆஃப் மெடல்
சிறந்த ஆடை வடிவமைப்பு - மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம்
சிறந்த ஒப்பனை, கூந்தல் அலங்காரம் - மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம்
கூ.தக. :
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்வாதி தியாகராஜன் துணை தயாரிப்பாளராக இருந்த "மை ஆக்டோபஸ் டீச்சர்' ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், ஆஸ்கர் விருது வென்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தய்யா உள்ளிட்டோருக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியரான பானு அத்தய்யா, கடந்த ஆண்டு அக்டோபரில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார்.
☞ ‘ வைல்டு இன்னோவேட்டர் விருது 2021’ (‘WILD Innovator Award’ for 2021) எனும் சுற்றுசூழல் விருது பெங்களூருவைச் சேர்ந்த பெண்மணி கீர்த்தி K காரந்த் (Krithi K Karanth) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியப் பெண்மணி இவராவர்.
☞ ’ இ-பஞ்சாயத்து விருதுகள் 2021’ (E-Panchayat Puraskar 2021) -ல், Category I பிரிவில் முதல் மாநிலத்திற்கான விருது உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாமிடத்தை அஸ்ஸாம் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களும், மூன்றாம் இடத்தை ஒடிஷா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களும் பகிர்ந்துள்ளன.
நியமனங்கள்
☞ மத்திய நிதித் துறை செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
முக்கிய தினங்கள்
☞ ’ ஆயுஷ்மான் பாரத் தினம்’ (Ayushman Bharat Diwas) - ஏப்ரல் 30
☞ சர்வதேச நடன தினம் - ஏப்ரல் 29
☞ பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான உலக தினம் (World Day for Safety and Health at Work) - ஏப்ரல் 28
☞ உலக மலேரியா தினம் (World Malaria Day) - ஏப்ரல் 25
☞ உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) - ஏப்ரல் 26
☞ உலக பென்குயின் தினம் (World Penguin Day) - ஏப்ரல் 25
☞ சர்வதேச செர்னோபில் அணு உலை விபத்து நினைவு தினம் (International Chernobyl Disaster Remembrance Day) - ஏப்ரல் 26
கூ.தக. : முன்னாள் சோவியத் யூனியனில் (தற்போது உக்ரைன் நாட்டிலுள்ளது) செர்னோபில் அணு உலை விபத்து 26-4-1986 அன்று நடைபெற்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்
☞ செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்து , அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ‘பெர்சிவரன்ஸ் விண்கலம்’( ‘ Perseverance’) சாதனை படைத்துள்ளது.
☞ விண்வெளியில் சொந்த ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள சீனா , அதற்கான , ‘ தியான்ஹே’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வுக் கலத்தை 29-4-2021 அன்று ‘லாங் மாா்ச்-5பி ஒய்2’ ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
விண்வெளி நிலையத்துக்கு வரும் வீரா்கள் தங்கியிருப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது.
இந்தக் கலத்தைப் போலவே, ‘தியான்காங்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது எதிா்கால விண்வெளி நிலையத்துக்கான மேலும் 10 தொகுதிகளை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அவற்றைக் கொண்டு உருவாக்கப்டும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
☞ ” ஒன் வெப்” ( OneWeb) எனும் செயற்கைக் கோள் திட்டத்தின் கீழ் 36 செயற்கைக் கோள்களை ரஷியா விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
கூ.தக. : அதிவேக பிராட்ஃபேண்ட் இணையதள சேவையை வழங்கும் நோக்கிலான ’ஒன்வெப்’(OneWeb) செயற்கைக் கோள் திட்டமானது இங்கிலாந்து, அலாஸ்கா, வட ஐரோப்பா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் கனடா நாடுகளில் இணையதள சேவையை விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தியாவில் ”ஒன் வெப்” (OneWeb) இணையதள சேவையானது பாரதி ஏர்டல் (Bharti Airtel) நிறுவனத்தின் துணை நிறுவனமான 'Nettle Infrastructure Investments’ எனும் நிறுவனத்தின் மூலம் ஜீன் 2022 க்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
☞ ” NROL-82 ” என்ற பெயரிலான உளவு செயற்கைக் கோளை அமெரிக்கா விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
விளையாட்டுகள்
☞ சொ்பிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி சாம்பியன் பட்டம் சூடினாா்.
☞ துருக்கியில் நடைபெற்ற இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டி கோப்பை வென்றாா்.
☞ 68 வது ‘பார்சிலோனா ஓபன்’ ( Barcelona Open) டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☞ “ Climate Change Explained – For One And All ” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஆகாஷ் ராணிசன் (Aakash Ranison)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.