மாநில வளர்ச்சி கொள்கைக் குழு (State Development Policy Council ) வின் துணைத் தலைவராக
பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராக செயல்படுவார். இவருடன் பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து இ.ஆ.ப (ஓய்வு), டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவின் முக்கிய பணிகள், மாநில வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்தல் குறித்து ஆலோசனை வழங்குதல் போன்றவை.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழு (State Development Policy Council ) பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் 2017-2018 பட்ஜெட்டில்
மாநில திட்டக் குழு (State Planning Commission) என்ற அமைப்பின் பெயர் "மாநில வளர்ச்சி கொள்கைக் குழு (State Development Policy Council )" என மாற்றப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரைத் தலைவராகவும், ஒரு துணைத் தலைவர், ஒரு நிரந்தர உறுப்பினர் மற்றும் 12 பகுதி நேர உறுப்பினர்களுடன் இந்த குழு முதல் முறையாக இந்த குழுவானது 23.04.2020ல் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
அப்போது, இந்த குழுவின் துணைத்தலவராக C.பொன்னையன் நியமிக்கப்பட்டிருந்தார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.