Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டம் 2025-26-ம் ஆண்டு வரை நீட்டிப்பு

 புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு  திட்டத்தை 2025-26-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

புலம்பெயர்ந்த, நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதற்காக ஆயிரத்து 452 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 துணை திட்டங்கள் உள்ளடங்கிய இந்த திட்டத்தை நடப்பு 2021-22-ம் ஆண்டில் இருந்து வருகிற 2025-26-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதன்படி, புலம்பெயர்ந்தோர் ஒரு நியாயமான வருமானம் ஈட்டவும், பொது பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களை இணைத்துக்கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உதவி வழங்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.