Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Group 4 Result latest news updates | குரூப் 4 தேர்வு முடிவுகள் பற்றிய செய்திகள்

7301  காலிப்பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 2022    தேர்வு   24 ஜீலை  2022 மாதத்தில் நடைபெற்றது.   இதில் சுமார் 18 இலட்சம்  பேர் எழுதியிருந்தார்கள்.  தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் 2022  மாதம் வெளியானது.   TNPSC ஏற்கனவே வெளியிட்ட உத்தேச தேர்வு அட்டவணையின் படி,  குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் அக்டோபர் 2022 -இல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால்,   TNPSC  17.10.2022 அன்று,  வெளியிட்ட தேர்வு முடிவுகள் குறித்த கால அட்டவணையின்  ( Results Declaration Schedule)  படி  TNPSC குரூப் 4  தேர்வுகளுக்கான முடிவுகள்  டிசம்பர் 2022 மாதத்தில்   வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


TNPSC குரூப் 4 2022    தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதத்திற்கான காரணம் என்ன ? 

 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 2022 மாதம்  தீர்ப்பு வழங்கியது.  ஏற்கனவே, மகளிருக்கான இடஒதுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு (Vertical Reservation) பதிலாக கிடைமட்ட நகர்வு (Horizontal Reservation) முறை பின்பற்ற வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்த புதிய நடைமுறையின் படி, மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும்.  இதனை நடைமுறைப்படுத்துவதற்கான  மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னரே   குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும்.    

TNPSC Group 4 Result latest news updates in English

17.10.2022 : TNPSC Group 4 2022 Exam for 7301 Vacancies was held on 24th July 2022. About 18 lakh people appeared for it. The tentative answerkey of the exam was released in the month of August 2022. According to the Results Declaration Schedule published by Tamil Nadu Public Service Commission on 17.10.2022, the results for TNPSC Group 4 examinations will be published in the month of December 2022.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.