தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான நவம்பர் 8ஆம் நாளைத் "தமிழ் அகராதியியல் நாள் விழா"வாகக் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 8, 1680 அன்று இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர், 1710-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கியச் சுவடிகளைப் பல இடங்களுக்குச் சென்று சேகரித்தார். மூன்று மொழி அகராதிகளை உருவாக்கியதால் தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
வரது இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி. மதுரை தமிழ்ச் சங்கம் கொடுத்த தைரியநாதர் என்னும் பட்டத்தை வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டவர்.
23 நூல்களைத் தமிழில் எழுதி உள்ளார். தேம்பாவணி என்னும் பெருங்காவியத்தை இயற்றியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.