Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

லச்சித் பர்புகானின் (Lachit Barphukan) 400-வது பிறந்ததினக் கொண்டாட்டம்

 லச்சித் பர்புகானின் (Lachit Barphukan) 400-வது பிறந்ததினத்தையொட்டி நவம்பர் 25, 2022 அன்று புதுதில்லி விக்யான் பவனில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். 


கூ.தக. : அறியப்படாத தலைவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொடர் முயற்சியாக 2022-ஆம் ஆண்டு லச்சித் பர்புகானின் 400-வது பிறந்த தினத்தை நாடு கொண்டாடி வருகிறது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குவஹாத்தியில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த்தால் கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.


லச்சித் பர்புகான் (24 நவம்பர் 1622 - 25 ஏப்ரல் 1672) அசாம் அகோம் அரசின் புகழ் பெற்ற ராணுவத் தளபதி ஆவார். அவுரங்கசீப் தலைமையின்கீழ், ஆட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முகலாயர்களை தோற்கடித்தார். 1671-ஆம் ஆண்டு முகலாயர்களுக்கு எதிரான சரைகாட் போரில் வெற்றி பெற்றதன் மூலம் அசாம் ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் ஏற்பட்டது. லச்சித் பர்புகானின் வீர,தீரமான போர்முறை நமது நாட்டின் ராணுவத்திற்கு உத்வேகம் அளிப்பவற்றில் ஒன்றாக விளங்குகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.