Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Group 2 2022 Result Published at official website tnpsc.gov.in

TNPSC Group 2 / 2A 2022 Results Published Today (11.8.2022) at TNPSC Official Website 


https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx


Download the Result PDF


TNPSC  Group 2 2022 தேர்வு முடிவுகள்  பற்றி  28.10.2022 அன்று TNPSC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கம் 


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு - II /IIA ( தொகுதி - II /IIA) -இற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு   ஒன்றை   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 28.10.2022 அன்று வெளியிட்டது. அதில்,  மகளிருக்கான  இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது   தொடர்பாக பல்வேறு  வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாகவும்,    சென்னை உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக   மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது எனவும்,  அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 



மேலும்,  இது தொடர்பாக செய்தி/சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை (www.tnpsc.gov.in) மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது.


பெண்களுக்கான 30% இடஒதுக்கீடு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 


TNPSC குரூப் 2 2022  முதனிலைத் தேர்வு (Preliminary Exam)  21 மே 2022 மாதத்தில் நடைபெற்றது.   இதில் சுமார் 9 இலட்சம்  பேர் எழுத்யிருந்தார்கள்.  TNPSC ஏற்கனவே வெளியிட்ட உத்தேச தேர்வு அட்டவணையின் படி,  குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் செப்டம்பர் 2022 -இல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால்,   தமிழ்நாடு அரசின் மகளிருக்கான 30%  இட ஒதுக்கீடு குறித்து  சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 2022-ல் வழங்கிய தீர்ப்பில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து  நகர்வுக்கு (Vertical Reservation) பதிலாக கிடைமட்ட நகர்வு முறை (Horizontal Reservation) பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.    இந்த புதிய நடைமுறையின் படி, மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும். அதன்படி, கிடைமட்ட இடஒதுக்கீடு (Horizontal Reservation) முறையை நடைமுறைப்படுத்தும்  வகையில்,  மென்பொருள் ஒன்றை  தேர்வாணையம் உருவாக்கியுள்ளது.   இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகளும் தாமதமாவதாக  டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. 

 தேர்வு முடிவுகள் குறித்த கால அட்டவணை ( Results Declaration Schedule)


17.10.2022 அன்று,  TNPSC  வெளியிட்ட தேர்வு முடிவுகள் குறித்த கால அட்டவணையின்  ( Results Declaration Schedule)  படி  TNPSC குரூப் 2/2A தேர்வுகளுக்கான முடிவுகள்  அக்டோபர் 2022 -ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


TNPSC Group 2 Result Latest News Updates in English : 

28.10.2022 : As per the official press release of  Tamil Nadu Public Service Commission dated 28.10.2022,  it was informed that various cases related to the implementation of reservation for women were pending in the Hon'ble Madras High Court, and the work of making appropriate changes in the software to implement the judgment given by the Madras High Court is nearing completion, and after the completion of the work, the TNPSC Group 2,2A  2022 Results will be published soon.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.