கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான TNPASS என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் 26.9.2023 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் செலுத்தலாம். இந்த இணையதளத்தை தேசிய தகவலியல் மையம் (National Informatics centre) வடிவமைத்துள்ளது.
இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம் (Online Payment), ரொக்க அட்டைகள் (Debit / ATM Cards Payment), கடன் அட்டைகள் (Credit Card Payment), யுபிஐ கட்டணம் (UPI Payment) மூலம் பணத்தினை செலுத்திட முடியும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக 24x7 முறையில் எந்த நேரத்திலும் வரி/ கட்டணம் செலுத்திட இயலும். இந்த நடவடிக்கையின் மூலம் ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.