-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Group 2 / 2A Exam Notification Latest News Updates

01-11-2019  :  TNPSC Group 2 Latest Syllabus - Official Model Question Paper is published by TNPSC . Download Now






tnpsc group 2 question pattern subjectwise distribution


23-10-2019  :  TNPSC Group II  Mains Written Exam (23.02.2019)  Results Published at TNPSC Official Webstie http://www.tnpsc.gov.in/results.html | Direct Link for the PDF  http://www.tnpsc.gov.in/results/SEL_OT_GROUP_II_MWE_2K19_LIST.pdf 

  • Oral Test will be held from 06/11/2019 to 30/11/2019 at the office of the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai - 600 003. 
  • The candidates should attend the Oral Test with all original certificates in support of the claims made in their online applications. 
  • Individual Communication regarding the date and time of Oral Test will not be sent to the candidates by post. 
  • The above details will be made available in the TNPSC Official website and the candidates will be informed of the above fact only through SMS and e-mail accordingly.
Source : TNPSC Official Website



21-10-2019 : TNPSC குரூப் 2 / 2 A தேர்வுகளில் புதிதாக  செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி 21-10-2019 அன்று  TNPSC வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியின் சுருக்கம்

முதனிலைத் தேர்வைப் (Preliminary Exam)  பற்றி ...
1.  முதனிலைத் தேர்வுக்கு (Preliminary Exam) ஏற்கனவே தேர்வாணையம்  புதிதாக அறித்த பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது.  (எனினும், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் - VIII, IX, க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.)
2.  தேர்வுக்கு தயாராகிக் கொள்வதற்கு வசதியாக, முதனிலைத் தேர்விற்கான ( Prelims)  மாதிரி வினாத்தாள் அக்டோபர் 2019 மாத இறுதியில் TNPSC இணையதளத்தில் வெளியிடப்படும்.

முதனிலைத் தேர்வு (Mains Exam) முறையில் புதிய மாற்றம் பற்றி ...
1. ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு  (Mains Written Exam)  தற்போது Paper 1 மற்றும் Paper 2 என இரண்டு தேர்வுகள் கொண்டதாக பிரித்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2. முதன்மை எழுத்துத் தேர்வின் பகுதி -அ (Part -A) மட்டும் தனித்தாளாக , Paper I  என மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதி அ (Paper I )  ஒரு  தகுதித் தேர்வாக மட்டுமே இருக்கும்.  இதில் பெறும் மதிப்பெண்கள் தரவரிசைக்கு பயன்படுத்தப்படாது. ஆனால்,  இத்தேர்வில் தகுதி பெற, ஒருவர் 100 க்கு 25 மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.  இந்த தேர்வானது 100 அதிக பட்ச மதிப்பெண்களைக் கொண்டதாக 1.30 மணி நேரம் நடைபெறும்.  தமிழக கிராமப் புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு  பகுதி அ (Paper I )  தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட தரம் பட்டபடிப்பிலிருந்து (Degree Standard)  பத்தாம் வகுப்பு (SSLC Standard)  தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத , படிக்க தெரிந்த மாணவர்களால் எளிதில் இத்தேர்வில் தகுதிபெற முடியும்.

(ii)  பகுதி - அ  தவிர்த்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் - 2 (Paper II) தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.  முன்னர் 200 மதிப்பெண்கள் கொண்ட இந்த  தாள் - 2 (Paper II)  தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும்.  விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
tnpsc group two new changes

தேர்விற்கான பாடத்திட்டம்  (தாள் -1) 
(பத்தாம் வகுப்பு தரம் | கால அளவு - 1.30 மணி நேரம்)
1. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்  - 2 கேள்விகள் (தலா 25 மதிப்பெண்கள் - மொத்தம் 50 மதிப்பெண்கள்)
2. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் - 2 கேள்விகள் (தலா 25 மதிப்பெண்கள் - மொத்தம் 50 மதிப்பெண்கள்)
tnpsc group 2 mains new syllabus

தேர்விற்கான பாடத்திட்டம்  (தாள் -2) 
(பட்டப்படிப்புத் தரம் | கால அளவு - 1.30 மணி நேரம்)
1. சுருக்கி வரைதல் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)
2. பொருள் உணர் திறன் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)
3. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)
4. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)
5. கடிதம் வரைதல்  - அலுவல் சார்ந்தது - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)
tnpsc group 2a mains new pattern

குறிப்பு :    தாள் -2  முழுவதையும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.  இந்த இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுக்கப்படும்.

மொத்த மதிப்பெண்கள் / குறைந்த பட்ச மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு பற்றி ....
1. குரூப் 2A  நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு  - மொத்த மதிப்பெண்கள் - 300 (தாள் -2 ல் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும்).  குறைந்த பட்ச மதிப்பெண்கள் - 90 (அனைத்து பிரிவினர்களுக்கும்.
2. குரூப் 2 நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு - மொத்த மதிப்பெண்கள்  340 (300+40)
(i)  எழுத்துத் தேர்வில்  - மொத்த மதிப்பெண்கள் - 300 (தாள் -2 ல் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும்).
(ii)  நேர்முகத் தேர்வில் - 40 மதிப்பெண்கள்
(iii)  குறைந்த பட்ச மதிப்பெண்கள் - 340 க்கு 102  (அனைத்து பிரிவினர்களுக்கும்.

ஆதாரம் : TNPSC Press Release, 21-10-2019

Tamil Nadu Public Service Commission conducts Group 2 / 2A Exams to fill up various posts in various   Departments of Tamilnadu Government. Any Indian Citizen having a Bachelor Degree can apply for these Group 2 /2A posts.  According to the latest changes (September 2019) made by TNPSC in the  Group 2 / 2A Exams,  Group 2 and Group 2A exams will have same preliminary and mains examination but Group 2 Exam only will have a Oral Test.  

Read more ...
(Accessed from TNPSC Official Website  http://www.tnpsc.gov.in/press/2019_Press_Release_Gr_II_IIA.pdf)

(Accessed from TNPSC Official Website http://www.tnpsc.gov.in/Syllabus/CCSE_II_SYLLABUS_27092019N.pdf)

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.